தேடுதல்

Vatican News
வத்திக்கானில் திருத்தந்தை திருமுழுக்கு அளிக்கிறார் வத்திக்கானில் திருத்தந்தை திருமுழுக்கு அளிக்கிறார்   (ANSA)

சனவரி 12ல், 32 குழந்தைகளுக்கு திருத்தந்தை திருமுழுக்கு

சனவரி 10, இவ்வெள்ளி முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2,300. அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 82 இலட்சம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 12, ஆண்டவரின் திருமுழுக்கு விழாவன்று, வத்திக்கான் அருங்காட்சியகத்திலுள்ள சிஸ்டீன் சிற்றாலயத்தில், காலை 9.30 மணிக்கு திருப்பலி நிறைவேற்றி, 32 குழந்தைகளுக்கு திருமுழுக்கு அளிப்பார்.

டுவிட்டர் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 11, இச்சனிக்கிழமையன்று, ஆண்டவரை வழிபடுதல் என்றால் என்ன என்பது பற்றிய சிந்தனைகளை, தன் இரு டுவிட்டர் செய்திகளில் வெளியிட்டுள்ளார்.

திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில், “வணங்குதல் என்பது, இயேசுவிடம் ஒரு விண்ணப்பப் பட்டியலுடன் செல்லாமல், அவரோடு நிலைத்திருக்கும் ஒரேயொரு விண்ணப்பத்தோடு மட்டும் செல்வதாகும். வணங்குதலில், இயேசு நம்மைக் குணப்படுத்தவும், மாற்றம் பெறவும் அவரை அனுமதிக்கின்றோம்” என்ற சொற்கள் வெளியாயின்.

திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “வணங்குதலில், ஆண்டவர் தம் அன்பால், நம்மை மாற்றுவதையும், நம் இருளில் ஒளியை ஏற்றுவதையும், பலவீனத்தில் சக்தி மற்றும், சோதனைகள் மத்தியில் துணிச்சலை வழங்குவதையும் இயலக்கூடியதாக ஆக்குகிறோம்” என்ற சொற்கள் பதிவாகியிருந்தன.

@pontifex விவரங்கள்

சனவரி 10, இவ்வெள்ளி முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2,300 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 82 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

@franciscus விவரங்கள்

இத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் instagram தளத்தில், இதுவரை வெளியான புகைப்படங்கள், மற்றும், காணொளிகள், 828 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 65 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

மேலும், வன்முறைக்குப் பலியாகுவோரைப் பாதுகாக்கும் இத்தாலிய கழகத்தினரை, சனவரி 11, இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்தில் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்

11 January 2020, 14:40