தேடுதல்

Vatican News
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களுடன் திருத்தந்தை அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களுடன் திருத்தந்தை  (ANSA)

இன்னும் நாம் பாவிகளே, ஆனால், அடிமைகள் அல்ல

கிறிஸ்தவனாக இருப்பது என்பது, சுதந்திரமாக இருப்பதாகும், ஏனெனில், இறைவார்த்தையை நாம் ஏற்று கீழ்ப்படிவதால், நமக்கு உறுதியான நம்பிக்கை கிட்டுகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்தவனாக வாழ்வது என்பது என்ன என்ற கேள்விக்கு பதில் தரும்வண்ணம், இத்திங்களன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'கிறிஸ்தவனாக வாழ்வது என்பது, ஒரு கருத்துக்கோட்பாட்டைக் கையிலெடுத்து, முன்னோக்கிச் செல்வதற்கென உன்னையே நியாயப்படுத்தும் நிலையை குறிப்பிடவில்லை. கிறிஸ்தவனாக இருப்பது என்பது, சுதந்திரமாக இருப்பதாகும், ஏனெனில், இறைவார்த்தையை நாம் ஏற்று கீழ்ப்படிவதால், நமக்கு உறுதியான நம்பிக்கை கிட்டுகின்றது’, என்று, இத்திங்களன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், 'இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்து நாம் சிறிது நேரம் அமைதியில் செலவிடுவோம். நம்மை தீமைகளிலிருந்து விடுவிப்பதற்காக ஆட்டுக்குட்டியாக மாற்றப்பட்ட இறைமகன் குறித்துத் தியானிப்போம். ஆம். இன்னும் நாம் பாவிகளே, ஆனால், அடிமைகள் அல்ல. நாம் குழந்தைகள், இறைவனின் குழந்தைகள்' என திருத்தந்தை இஞ்ஞாயிறன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தி கூறுகிறது.

இதற்கிடையே, ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அத் லிமினா' சந்திப்பையொட்டி, உரோம் நகர் வந்திருந்த அமெரிக்க ஐக்கிய நாட்டின் 26 ஆயர்களை, இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்

20 January 2020, 15:57