தேடுதல்

Vatican News
புதன் மறைக்கல்வியுரையின்போது  திருத்தந்தை பிரான்சிஸ் - 290120 புதன் மறைக்கல்வியுரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ் - 290120  (Vatican Media)

மலைப்பொழிவை மையப்படுத்தி டுவிட்டர் செய்தி

பேறுபெற்றோர் என்ற கூற்றுகள், கிறிஸ்தவரின் அடையாள அட்டையாக உள்ளது. அவ்வுண்மைகள், துன்பங்கள் நடுவிலும், எவ்வாறு மகிழ்வுடன் வாழ்வது என்பதை அறிந்துகொள்ள உதவுகின்றன" – திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சனவரி 29, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வழங்கிய மறைக்கல்வி உரையில், இயேசு மலைப்பொழிவில் கூறிய 'பேறுபெற்றோர்' வரிகளை மையப்படுத்தி, ஒரு புதிய மறைக்கல்வித் தொடரைத் துவைக்கியதையடுத்து, அக்கருத்தை, தன் டுவிட்டர் செய்தியிலும் பதிவு செய்திருந்தார்.

#GeneralAudience என்ற ‘ஹாஷ்டாக்’குடன் வெளியான டுவிட்டர் செய்தியில், "பேறுபெற்றோர் என்ற கூற்றுகள், கிறிஸ்தவரின் அடையாள அட்டையாக உள்ளது. அந்த உண்மைகள், கடந்து செல்லக்கூடிய மகிழ்வைக் குறிப்பன அல்ல, மாறாக, துன்பங்கள் சூழ்ந்தாலும், எவ்வாறு மகிழ்வுடன் வாழ்வது என்பதை அறிந்துகொள்ள உதவுகின்றன" என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

கடந்த ஆண்டு, அக்டோபர் 30ம் தேதி முதல், திருத்தூதர் பணிகள் நூலை மையப்படுத்தி, புதன் மறைக்கல்வி உரைகளை வழங்கிவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 29, இப்புதனன்று, இயேசுவின் மலைப்பொழிவை மையப்படுத்தி, ஒரு புதிய மறைக்கல்வித் தொடரைத் துவங்கியுள்ளார்.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

சனவரி 29, இப்புதன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2.326 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 82 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் instagram தளத்தில், இதுவரை வெளியான புகைப்படங்கள், மற்றும், காணொளிகள், 837 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 65 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

29 January 2020, 14:59