தேடுதல்

Vatican News
Yo Puedo திட்ட சிறாருடன் திருத்தந்தை பிரான்சிஸ் Yo Puedo திட்ட சிறாருடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

பாலியல் முறைகேடு விவகாரத்தில் இரகசியம் காக்கப்படுவது இரத்து

திருஅவையில் அருள்பணித்துவ வாழ்விலுள்ளோர் சிறார்க்கெதிராக இழைக்கும் பாலியல் முறைகேடு குற்றங்கள் குறித்த சான்றுகள் இரகசியம் காக்கப்படுவதை திருத்தந்தை இரத்து செய்துள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருஅவை மேய்ப்புப்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகள் குறித்த விவகாரங்களில், திருஅவை சட்டப்படி சேகரித்த சான்றுகளை, சட்டமுறையான அதிகாரிகளுக்கு கிடைப்பதற்கு ஆவன செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அருள்பணித்துவ வாழ்விலுள்ள உறுப்பினர்களால், சிறார்க்கு எதிராக ஆற்றப்பட்ட பாலியல் முறைகேடுகள் மற்றும், பாலியல் வன்முறை குறித்த விவகாரங்களில், திருஅவையில் இரகசியம் காக்கப்படுவதை திருத்தந்தை, டிசம்பர் 17, இச்செவ்வாயன்று இரத்து செய்துள்ளார்.

மேலும், தவறான பாலியல் நடவடிக்கைகளைத் தூண்டும், 18 வயதுக்குட்பட்ட சிறார் பற்றிய படங்கள், இலக்கியங்கள் போன்றவற்றை, அருள்பணியாளர்கள் பாலியல் இன்பத்தை நிறைவுசெய்வதற்காக வைத்திருப்பது மற்றும், விநியோகிப்பது குறித்த பெருங்குற்றம் தொடர்பான விதிமுறையை மாற்றவும் திருத்தந்தை தீர்மானித்துள்ளார்.

இந்த பெருங்குற்றம் குறித்த விவகாரங்களை அருள்பணியாளர்கள் மட்டுமே விசாரிக்கலாம் என்றிருந்த நிலை மாறி, திருஅவை சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் எந்த பொதுநிலை விசுவாசியும் அதனை விசாரிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

17 December 2019, 15:31