தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ், பேராயர் ஜஸ்டின் வெல்பி, பிரெஸ்பிட்டேரியன் ஜான் சால்மெர்ஸ் ஆகிய மூவரும் தென் சூடான் தலைவர்களைச் சந்தித்தல் (கோப்புப் படம்) திருத்தந்தை பிரான்சிஸ், பேராயர் ஜஸ்டின் வெல்பி, பிரெஸ்பிட்டேரியன் ஜான் சால்மெர்ஸ் ஆகிய மூவரும் தென் சூடான் தலைவர்களைச் சந்தித்தல் (கோப்புப் படம்)  (ANSA)

தென் சூடான் நாட்டு தலைவர்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து

திருத்தந்தை பிரான்சிஸ், பேராயர் ஜஸ்டின் வெல்பி, பிரெஸ்பிட்டேரியன் முன்னாள் ஒருங்கிணைப்பாளர், ஆகிய மூவரும் இணைந்து, தென் சூடான் நாட்டின் அரசியல் தலைவர்களுக்கு, கிறிஸ்து பிறப்பு பெருவிழா செய்தியை அனுப்பியுள்ளனர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ், ஆங்கிலிக்கன் சபையின் தலைவர், பேராயர் ஜஸ்டின் வெல்பி (Justin Welby), மற்றும், ஸ்காட்லாந்து பிரெஸ்பிட்டேரியன் முன்னாள் ஒருங்கிணைப்பாளர், மதிப்பிற்குரிய ஜான் சால்மெர்ஸ் (John Chalmers) ஆகிய மூவரும் இணைந்து, தென் சூடான் நாட்டின் அரசியல் தலைவர்களுக்கு, கிறிஸ்து பிறப்பு பெருவிழாவையொட்டி, வாழ்த்துச் செய்தியொன்றை, டிசம்பர் 25, இப்புதன் காலையில் அனுப்பியுள்ளனர்.

தென் சூடான் நாட்டு மக்கள், அமைதியும், வளம் நிறைந்த வாழ்வும் பெறவேண்டுமென, கிறிஸ்மஸ், மற்றும் புத்தாண்டு காலத்தில் வாழ்த்துகிறோம் என்று, இச்செய்தியின் துவக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

தென் சூடான் நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தம், விரைவில், நடைமுறை வாழ்வாக மாற, தாங்கள், அந்நாட்டு மக்களுடன் ஆன்மீக வழியில் இணைந்திருப்பதாக, இம்மூன்று தலைவர்களும் கூறியுள்ளனர்.

தென் சூடான் நாட்டு மக்கள், ஒப்புரவையும், உடன்பிறந்த உணர்வையும் உருவாக்கும் பாதையில் நடைபயில, மீட்பராம் கிறிஸ்து உதவுவாராக என்ற வாழ்த்துடன், அனைவருக்கும் ஆசீர் வழங்கி, இம்மூன்று தலைவர்களும் இச்செய்தியை நிறைவு செய்துள்ளனர்.

25 December 2019, 12:02