தேடுதல்

Vatican News
புனித லூயிஸ் மருத்துவமனையில் திருத்தந்தை புனித லூயிஸ் மருத்துவமனையில் திருத்தந்தை  (Vatican Media)

பாங்காக் புனித லூயில் மருத்துவமனை

புனித லூயிஸ் மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டதன் 120ம் ஆண்டு நிறைவு தற்போது சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

மேரி தெரேசா: வத்திக்கான்

நவம்பர் 21, இவ்வியாழன் உள்ளூர் நேரம் 11 மணியளவில், பாங்காக் புத்தமத ஆலயத்திலிருந்து புனித லூயிஸ் மருத்துவமனைக்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும், நோயாளிகள் என, ஏறத்தாழ 700 பேரைச் சந்தித்து உரையாற்றினார். சியாம் கத்தோலிக்க மறைப்பணித்தளத்தின் தலைவராகப் பணியாற்றி பேராயர் லூயிஸ் வே அவர்களால், 1898ம் ஆண்டில் புனித லூயிஸ் மருத்துவமனை கட்டப்பட்டது. தாய்லாந்து நாடு, 1939ம் ஆண்டு வரை சியாம் என்றே அழைக்கப்பட்டது. ‘இரக்கம் உள்ள இடத்தில் கடவுள் இருக்கிறார்’ என்ற விருதுவாக்குடன், அம்மருத்துவமனையை, முதலில் புனித Paul de Chjartres சபை அருள்சகோதரிகள் நடத்தினர். புனித லூயில் மருத்துவமனையில் நாற்பது நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளையும் தனியே சந்தித்து ஆசீர் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். புனித லூயிஸ் மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டதன் 120ம் ஆண்டு நிறைவு தற்போது சிறப்பிக்கப்பட்டு வருகிறது. அன்னை மரியாவும் குழந்தை இயேசுவும் சித்தரிக்கப்பட்ட படம் ஒன்றை, இம்மருத்துவமனைக்குப் பரிசாக அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். இம்மருத்துவமனையில் அனைவரையும் ஆசீர்வதித்து, பின்னர், பாங்காக் திருப்பீட தூதரகம் சென்று மதிய உணவருந்தி ஓய்வும் எடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

21 November 2019, 15:46