தேடுதல்

Vatican News
இறந்த கர்தினால்கள், ஆயர்கள் நினைவாக வத்திக்கான் பசிலிக்காவில் திருப்பலி இறந்த கர்தினால்கள், ஆயர்கள் நினைவாக வத்திக்கான் பசிலிக்காவில் திருப்பலி  (ANSA)

இயேசுவின் அழைப்பு, மரணத்திற்கு எதிரான தடுப்பு மருந்து

எப்போதும் ஒன்றிலிருந்து வெளியேறி, மற்றொன்றிற்கு செல்வதன் வழியாக, வளர்ந்து கொண்டிருக்கும் நாம், நம்மிலிருந்து வெளியேறி, இறைவனை நோக்கி செல்ல கற்றுக்கொள்ளவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

நாம் இறப்பிற்கு அல்ல, மாறாக, உயிர்ப்பிற்கு பிறந்தவர்கள் என்பதை மனதில் கொண்டவர்களாக, உயிர்ப்பு என்பது நமக்குக் கூறுவதையும், மீண்டும் உயிர்த்தெழுவது குறித்து நாம் எவ்வாறு பதிலுரைக்கிறோம் என்பதையும் சிந்திப்போம் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த ஓராண்டு காலத்தில், திருஅவையில் உயிரிழந்த, கர்தினால்கள், மற்றும், ஆயர்களின் ஆன்ம நிறை சாந்திக்காக, இத்திங்களன்று காலை, வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், என்னிடம் வாருங்கள் என இயேசு அழைப்பது, மரணத்திற்கு எதிரான தடுப்பு மருந்து, மற்றும், அனைத்தும் முடிந்துவிடும் என்ற அச்சத்திற்கு எதிரானது என்று கூறினார்.

என் வாழ்வு நடவடிக்கைகளில் இயேசுவை நான் அணுகினேனா, அவரோடு உரையாடினேனா, மற்றவர்களிடையே அவரை கொணர்ந்தேனா, செபத்தில் அவர்களை இயேசுவிடம் அழைத்து வந்தேனா என்ற கேள்விகளை, நாம் ஒவ்வொருவரும், தினமும் கேட்கவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் முன் வைத்தார்.

நம் வாழ்வில் எப்போதும் ஒன்றிலிருந்து வெளியேறி, மற்றொன்றிற்கு செல்வதன் வழியாக, வளர்ந்து கொண்டிருக்கும் நாம், நம்மிலிருந்து வெளியேறி, இறைவனை நோக்கி செல்ல கற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, நாம் நன்றாக விதைத்துள்ளதை, அறுவடையில் கண்டுகொள்வதைப்போல், நம் இறுதிக்காலமே, நாம் வாழ்த்த விதத்தை எடுத்துரைக்கிறது என மேலும் கூறினார். 

04 November 2019, 15:18