தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் மறைக்கல்வியுரை 131119 திருத்தந்தையின் மறைக்கல்வியுரை 131119  (Vatican Media)

மனிதகுல உடன்பிறந்த உணர்வு குறித்த அபுதாபி ஏட்டின் உணர்வால் தூண்ட

மனிதகுல உடன்பிறந்த உணர்வு குறித்த அபுதாபி ஏட்டின் உணர்வால் தூண்டப்பட்டவர்களாக, மதங்களிடையே கலந்துரையாடல்களையும், நல்லிணக்கத்தையும் ஊக்குவியுங்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

தன் புதன் பொது மறைக்கல்வியுரையின் இறுதியில், அன்பு கொண்ட புர்கினா ஃபாசோ (Burkina Faso) நாட்டின் அண்மைய நிலைகள் குறித்த தன் எண்ணத்தை பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தொடர்ந்து வன்முறைகளால் பாதிக்கப்பட்டு வரும் இந்நாட்டில், அண்மையில் இடம்பெற்ற ஒரு தாக்குதலில் ஏறத்தாழ நூறு பேர் வரை உயிரிழந்தது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பலியானவர்களையும் காயமடைந்தோரையும், இதன் பாதிப்புக்களால் துன்பங்களை அனுபவிப்போரையும்  இறைவனின் பராமரிப்பில் ஒப்படைப்பதாகவும் தெரிவித்தார்.

எளிதில் பாதிப்படையவல்ல மக்களின் பாதுகாப்புக்காக அழைப்புவிடுப்பதாக உரைத்த திருத்தந்தை, சமூக, மற்றும், மதத்தலைவர்களும், நல்மனம் கொண்டோரும், மனிதகுல உடன்பிறந்த உணர்வு குறித்த அபுதாபி ஏட்டின் உணர்வால் தூண்டப்பட்டவர்களாக மதங்களிடையே கலந்துரையாடல்களையும், நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்க விண்ணப்பிக்கிறேன் என்று கூறினார். இப்பொது மறைக்கல்வியுரையின் இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

13 November 2019, 14:46