தேடுதல்

Vatican News
போலந்தில் 1942ம் ஆண்டு கொல்லப்பட்ட Giovanni Francesco Macha போலந்தில் 1942ம் ஆண்டு கொல்லப்பட்ட Giovanni Francesco Macha 

அருளாளர் Luigi Palazzoloன் பரிந்துரையால் புதுமை

இஸ்பெயின் நாட்டின் உள்நாட்டுப் போரின்போது, 1936ம் ஆண்டில் கொல்லப்பட்ட Gaetano Giménez Martín மற்றும், அவரோடு சேர்ந்த 15 பேர், போலந்தில் 1942ம் ஆண்டு கொல்லப்பட்ட Giovanni Francesco Macha ஆகியோரின் புண்ணிய நற்பண்புகளை திருத்தந்தை ஏற்றுள்ளார்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வணக்கத்துக்குரியவர், அருளாளர், புனிதர் ஆகிய நிலைகளுக்கு உயர்த்துவதற்கென, பல நாடுகளில், புண்ணியப் பண்புகளில் சிறந்த விளங்கியவர்கள் மற்றும், மறைசாட்சிகளின் பரிந்துரைகளால் இடம்பெற்ற புதுமைகள் மற்றும், அவர்களின் சாட்சிய வாழ்வை அங்கீகரித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனிதர்பட்ட வழிமுறைகளுக்குப் பொறுப்பான பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பெச்சு அவர்கள், நவம்பர் 28, இவ்வியாழன் மாலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து, 26 பேர் பற்றிய விவரங்களைச் சமர்ப்பித்தார்.

இத்தாலியில் ஏழைகளின் அருள்சகோதரிகள் சபையை நிறுவிய, அருளாளர் Luigi Maria Palazzolo, (10,டிச.11827-15,ஜூன்,1886); இத்தாலியின் வணக்கத்துக்குரிய மறைமாவட்ட அருள்பணியாளர் Olinto Marella (14 ஜூன்,1882-6 செப்.1969) ; உகாண்டா நாட்டில் இறைபதம் சேர்ந்த, இத்தாலியரான இயேசுவின் திரு இதய கொம்போனி மறைப்பணியாளர் சபையின், வணக்கத்துக்குரிய அருள்பணியாளர் Giuseppe Ambrosoli (25,ஜூலை1923-27, மார்ச்,1987); ஆகிய மூவரின் பரிந்துரைகளால் இடம்பெற்ற புதுமைகளுக்கு திருத்தந்தை இசைவு தெரிவித்துள்ளார்.

இஸ்பெயின் நாட்டில் உள்நாட்டுப் போரின்போது, 1936ம் ஆண்டில் விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்ட இறை ஊழியர் Gaetano Giménez Martín மற்றும், அவரோடு சேர்ந்த 15 மறைசாட்சிகள், போலந்து நாட்டின் Katowiceயில், 1942ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்ட இறை ஊழியர் Giovanni Francesco Macha ஆகியோரின் புண்ணிய நற்பண்புகளை திருத்தந்தை ஏற்றுள்ளார்.

இன்னும், கானடா நாட்டில் 1933ம் ஆண்டில் இறைபதம் சேர்ந்த, அமலமரி தியாகிகள் சபையின் ஆயர் Ovidio Charlebois, ஜெர்மனியில் 1833ம் ஆண்டில் இறைபதம் சேர்ந்த, ஆயர் Michele Wittmann, இத்தாலியில் 1923ம் ஆண்டில் இறைபதம் சேர்ந்த, அமல மரியின் பிரான்சிஸ்கன் சகோதரிகள் சபையை நிறுவிய மறைமாவட்ட அருள்பணி Olinto Fedi,  இத்தாலியில், 1967ம் ஆண்டில் இறைவனடி எய்திய, பிரான்சிஸ்கன் துறவி Giacomo Bulgaro, 1785ம் ஆண்டில் இறைபதம் சேர்ந்த, Romiteயின் புனித ஜான் பாப்டிஸ்ட் ஆழ்நிலை தியான துறவு இல்லத்தை நிறுவிய Giovanna Maria Battista Solimani, பெல்ஜியம் நாட்டில் 1621ம் ஆண்டில் இறைபதம் சேர்ந்த, இஸ்பானியரான, கார்மேல் ஆழ்நிலை துறவு சபையின் Anna di Gesù De Lobera ஆகிய ஆறு பேரின் புண்ணிய நற்பண்புகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 28, இவ்வியாழனன்று இசைவு தெரிவித்துள்ளார்.  

29 November 2019, 15:14