தேடுதல்

Vatican News
சீரோ மலபார் ஆயர்களுடன் திருத்தந்தை சீரோ மலபார் ஆயர்களுடன் திருத்தந்தை  (ANSA)

சீரோ–மலபார் திருஅவை ஆயர்களின் அத் லிமினா சந்திப்பு

அக்டோபர் 13ம் தேதி, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில், இந்தியாவின் அருளாளர் Mariam Thresia உட்பட, ஐந்து அருளாளர்களைப் புனிதர்களாக அறிவிப்பார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வியாழன் காலையில் நிறைவேற்றிய திருப்பலியை மையப்படுத்தி, ஹாஸ்டாக் (#SantaMarta) குடன், தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுளின் வார்த்தை, நம்மை மகிழ்வால் நிரப்புகின்றது மற்றும், இந்த மகிழ்வே நம் வலிமை. நாம் மகிழ்வான கிறிஸ்தவர்கள், ஏனெனில், கடவுளின் வார்த்தையை நம் இதயங்களில் வரவேற்கிறோம், இதுவே, இன்று நம் அனைவருக்கும் வழங்கப்படும் செய்தி என்ற சொற்களை, ஹாஸ்டாக் (#antaMarta) குடன், இவ்வியாழனன்று தன் டுவிட்டர் செய்தியில் பதிவுசெய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், கேரளாவின் சீரோ–மலபார் திருஅவை ஆயர்கள் அத் லிமினா சந்திப்பையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தனர்.

இன்னும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் செயலர் Michael Richard Pompeo அவர்களுடன் திருப்பீடம் சென்றிருந்த குழுவினரைச் சந்தித்து கலந்துரையாடினார்.

புனிதர்பட்ட திருப்பலி

அக்டோபர் 13 ஞாயிறு காலை 10.15 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில், இந்தியாவின் அருளாளர் Mariam Thresia Chiramel Mankidiyan உட்பட, ஐந்து அருளாளர்களைப்  புனிதர்களாக அறிவிக்கும் திருப்பலியை நிறைவேற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

John Henry Newman, Giuseppina Vannini, Mariam Thresia Chiramel Mankidiyan, Dulce Lopes Pontes, Margherita Bays ஐந்து அருளாளர்களை, புனிதர்களாக அறிவிப்பார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பிலிப்புநேரி சபையை ஆரம்பித்த அருளாளர் ஜான் கென்றி நியுமன் அவர்களின் “Lead kindly light” என்ற பாடல் பிரபலமானது.

கேரளாவின் சீரோ–மலபார் திருஅவையைச் சார்ந்த, திருக்குடும்ப சபையை (CHF) ஆரம்பித்த அருளாளர் Mariam Thresia Chiramel Mankidiyan அவர்கள், 1876ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி பிறந்து, 1926ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி இறைபதம் அடைந்தார். இவர், ஏழைகளில் ஏழைகளுக்குப் பணியாற்றியவர்.

 

03 October 2019, 15:17