தேடுதல்

Vatican News
கர்தினால் Serafim Fernandes de Araújo கர்தினால் Serafim Fernandes de Araújo  

மறைந்த கர்தினால் de Araújoவுக்காக திருத்தந்தை செபம்

கர்தினால் Serafim de Araújo அவர்களின் மறைவோடு, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 224, எண்பது வயதுக்குட்ப்பட்டவர்களின் எண்ணிக்கை 127

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 08, இச்செவ்வாய் மாலையில் துவங்கிய, அமேசான் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தின் நான்காவது பொது அமர்வில், இச்செவ்வாயன்று இறைபதம் சேர்ந்த கர்தினால் Serafim Fernandes de Araújo அவர்களின் ஆன்மா நிறைசாந்தியடைய செபிக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

செபத்துடன் துவங்கிய இந்த நான்காவது பொது அமர்வில், 182 மாமன்றத் தந்தையர் பங்குகொண்டனர்.

பிரேசில் நாட்டின் Minas Novas நகரில், 1924ம் ஆண்டு பிறந்த கர்தினால் Serafim Fernandes de Araújo அவர்கள், அந்நாட்டின் Belo Horizonte உயர்மறைமாவட்டத்தில், 1986ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டுவரை பேராயராகப் பணியாற்றியவர்.

கர்தினால் Serafim Fernandes de Araújo அவர்கள், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால், 1998ம் ஆண்டில் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். இவர், தனது 95வது வயதில், அக்டோபர் 8, இச்செவ்வாயன்று, Belo Horizonte நகரில் இறைவனடி சேர்ந்தார்.

கர்தினால் Serafim Fernandes de Araújo அவர்களின் மறைவோடு, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை, 224 ஆகவும், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடையவர்களின் எண்ணிக்கை 127 ஆகவும் மாறியுள்ளது. 

09 October 2019, 15:36