தேடுதல்

Vatican News
மடகாஸ்கர் நாட்டிற்கு காணொளிச் செய்தி மடகாஸ்கர் நாட்டிற்கு காணொளிச் செய்தி 

மடகாஸ்கர் நாட்டிற்கு, திருத்தந்தையின் காணொளிச் செய்தி

மடகாஸ்கர் நாட்டில், இயற்கை அழகோடு, அம்மக்களின் புனிதத்துவம் என்ற அழகும் முக்கியத்துவம் நிறைந்தது - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 4, இப்புதன் முதல், தான் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்தையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மடகாஸ்கர் நாட்டிற்கு, காணொளி வடிவில், வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

தன் பயணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருவோருக்கும், இன்னும் இப்பயணத்திற்காக செபிப்போருக்கும் தன் நன்றியைத் தெரிவித்துள்ள திருத்தந்தை, அந்நாட்டின் இயற்கை அழகை, தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு, தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார்.

இயற்கை அழகோடு, அம்மக்களின் புனிதத்துவம் என்ற அழகும் முக்கியத்துவம் நிறைந்தது என்று தன் காணொளிச் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மக்களை, விசுவாசத்தில் உறுதிப்படுத்த இத்திருத்தூதுப் பயணம் உதவும் என்று தான் நம்புவதாக மேலும் கூறியுள்ளார்.

02 September 2019, 15:45