தேடுதல்

Vatican News
சிரியாவில் போரில் சிலுவை சிரியாவில் போரில் சிலுவை  (AFP or licensors)

இயேசுவின் திருச்சிலுவையின் மாட்சி விழா

நான்காம் நூற்றாண்டின் துவக்கத்தில், உரோமைப் பேரரசர் கான்ஸ்ட்டைன் அவர்களின் அன்னை, அரசி புனித ஹெலன், கிறிஸ்துவின் வாழ்வோடு தொடர்புடைய புனித இடங்களைத் தேடி எருசலேம் சென்றார்

மேரி தெரேசா– வத்திக்கான் செய்திகள்

 “இன்று, திருஅவை, ஆண்டவரின் மாட்சியுள்ள திருச்சிலுவை பற்றி நம்மைத் தியானிக்க அழைக்கின்றது, கிறிஸ்து கடவுளாயிருந்தும், பணியாள் என்ற நிலைக்கு அவர் தம்மையே தாழ்த்தினார், இதுவே, இயேசுவின் திருச்சிலுவையின் மாட்சி!” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார்.

திருச்சிலுவையின் மாட்சி விழாவாகிய செப்டம்பர் 14, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், தன் டுவிட்டர் செய்தியில், திருச்சிலுவை பற்றிய சிந்தனைகளை வெளியிட்டுள்ளார்.

திருச்சிலுவை வரலாறு

நான்காம் நூற்றாண்டின் துவக்கத்தில், உரோமைப் பேரரசர் கான்ஸ்ட்டைன் அவர்களின் அன்னை, அரசி புனித ஹெலன், கிறிஸ்துவின் வாழ்வோடு தொடர்புடைய புனித இடங்களைத் தேடி எருசலேம் சென்றார். அவர், நம் மீட்பரின் கல்லறை மீது கட்டப்பட்டிருப்பதாகப் பாரம்பரியமாக நம்பப்படும் இரண்டாம் நூற்றாண்டின் Aphrodite ஆலயத்தைக் கண்டுபிடித்தார். பேரரசர் கான்ஸ்ட்டைனும் அந்த இடத்தில், புனித கல்லறை திருத்தலத்தை எழுப்பினார். அங்கு நடத்தப்பட்ட அகழ்வராய்ச்சிகளில், மூன்று சிலுவைகள் கண்டெடுக்கப்பட்டன. அச்சிலுவையில் ஒன்றை ஒரு நோயாளிப்பெண் தொட்டவுடன் குணமானதை வைத்து, அது இயேசு இறந்த திருச்சிலுவை என உறுதிசெய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதற்குப்பின், அச்சிலுவை வணங்கப்பட்டு வருகிறது. அந்த பசிலிக்கா எழுப்பப்பட்டு அர்ப்பணிக்கப்பட்ட நாளை, திருச்சிலுவையின் மாட்சி விழாவாக, கீழை வழிபாட்டுமுறை, இலத்தீன் வழிபாட்டுமுறை மற்றும், ஆர்த்தடாகஸ் சபைகள் சிறப்பித்து வருகின்றன..

பேரரசர் ஹெராகிளியுஸ் அவர்கள், கி.பி.614 அல்லது 615ம் ஆண்டில், பெர்சியர்களிடமிருந்து இச்சிலுவையை மீட்டதற்குப் பின்னர், இவ்விழா, ஏழாம் நூற்றாண்டில், மேற்கத்திய திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைக்கப்பட்டது.

14 September 2019, 15:27