தேடுதல்

Vatican News
மொசாம்பிக் திருப்பலியில் திருத்தந்தை - 060919 மொசாம்பிக் திருப்பலியில் திருத்தந்தை - 060919  (Vatican Media)

மொசாம்பிக் மக்களுக்கு அமைதியில் வாழ உரிமை உள்ளது

மொசாம்பிக் மக்கள், அரசியல் அல்லது தனிப்பட்ட வாழ்வில், ஊழலையும், சுயஆதாயங்களையும் புறக்கணித்து, அமைதியான வருங்காலத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இயேசு மலைப்பொழிவில், பேறுபெற்றவர் பற்றிக் கூறியதை, லூக்கா நற்செய்தியிலிருந்து  இப்போது வாசிக்கக் கேட்டோம். இயேசு தம் திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்த பின்னர், பேறுபெற்றவர்கள் பற்றி அறிவித்தார். அதில், “நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன், உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள்” (லூக். 6:27) என்றும் திருவாய்மலர்ந்தருளினார். இயேசுவின் இவ்வார்த்தைகள், இன்று நம் எல்லாருக்கும் சொல்லப்படுகின்றன. உங்களில் பலர், வன்முறை, காழ்ப்புணர்வு மற்றும் போரின் சொந்தக் கதைகளை, இன்னும், சொல்ல முடியும். இவை உங்களுக்கு அல்லது இன்று உயிரோடு இல்லாத உங்களைச் சார்ந்தவர்களுக்கு நடந்திருப்பவை. மேலும், சிலர், கடந்தகாலக் காயங்கள் மீண்டும் திறக்கக்கூடும் என்ற அச்சத்திலும் வாழலாம். பல ஆண்டுகளாக நடைபெற்ற போரின் காயங்கள் இன்னும் திறந்தநிலையில் இருக்கும்போது, ஒப்புரவு பற்றி எளிதாகப் பேச முடியாது மற்றும், மன்னிப்பை நோக்கி முயற்சிகள் எடுக்க இயலாது. இப்படியிருந்தாலும், இயேசு நம்மை புண்படுத்தியவர்களுக்கு, பாரபட்சமின்றி, மிகச்சிறந்த நன்மைத்தனத்தைக் காட்டி, அன்புகூர அழைக்கிறார்.

வெறுப்பும், பழிவாங்குதலும்

வன்முறையின் அடிப்படையில் ஒரு சமத்துவ சமுதாயத்தையோ, வருங்கால நாட்டையோ கட்டியெழுப்ப இயலாது. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற விதிமுறையில் ஒருவர் வாழ்ந்தால், அவரால் இயேசுவைப் பின்செல்ல இயலாது. ஒரு குடும்பத்தையோ, இனக்குழுவையோ, அயலவர் குழுவையோ, ஏன் ஒரு நாட்டையோ, ஒன்றிணைத்து, வேறுபாடுகளைக் களைந்து, பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கென, வெறுப்பும், பழிவாங்கும் உணர்வும் பயன்படுத்தப்பட்டால், அவற்றிற்கு வருங்காலமே கிடையாது. வன்முறையின் ஆயுதங்கள், தீர்வுகளை வழங்காமல், புதிய மற்றும், அதிக வன்மம்கொண்ட போர்களையே உருவாக்கும். வன்முறையிலிருந்து பிறக்கும் சமத்துவம், எப்போதும் மிக அதிகமான கடும் சேதங்களையேக் கொணரும். நம் மக்கள், அமைதியில் வாழ்வதற்கு உரிமையைக் கொண்டுள்ளார்கள் என்ற முக்கியமான கூற்றை மறக்காமல் இருப்பது, மற்றோர் இயலக்கூடிய பாதையாகும்.

“பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் என்ற பொன்விதியையும் இயேசு தந்துள்ளார். எனவே எதையும் எதிர்பாராமல் பிறரை அன்புகூர்வது நமக்கு மிகவும் உதவும்.  போரில்லாச்சூழலில், பிரிவினைகள் மற்றும், வன்முறைக் காலங்களை முறியடிப்பது, ஒப்புரவு அல்லது, அமைதிக்கான செயல்பாட்டிற்கு மட்டுமல்ல. மாறாக, நாம் எவ்வாறு நடத்தப்பட விரும்புகின்றோமோ, அதே இரக்கம் மற்றும் நன்மைத்தனத்தில் மற்றவரை நடத்துவதற்கு, ஒவ்வொரு நாளும் அர்ப்பணிப்பதற்கும் அழைப்பு விடுக்கின்றது.

இயற்கை, கலாச்சார வளங்கள், அமைதி

மொசாம்பிக் அளப்பரிய இயற்கை மற்றும், கலாச்சார வளங்களைக் கொண்டுள்ள நாடு. எனினும், பெரும் எண்ணிக்கையில் மக்கள் வறுமையிலும் வாடுகின்றனர். அதேநேரம், இதே நிலத்தில், ஊழலுக்கும் மக்கள் தங்களைக் கையளிக்கின்றனர் என்பது வருத்தமான செய்தி. எனவே, அரசியல் அல்லது தனிப்பட்ட ஆதாயங்களுக்காக, ஏழைகளைப் பயன்படுத்தி, அநீதியான சூழல்களை உருவாக்கும் கருத்தியல்கள், ஒருநாட்டை இயக்கிச் செல்லும் இயந்திரங்களாக அமையமாட்டா என்பதை நினைவில் பதிக்க வேண்டும். நம் இதயங்களிலும், நம் மக்களின் வாழ்விலும், வருங்காலத்திலும் அமைதி ஆட்சிபுரிய வேண்டுமெனில், கிறிஸ்துவின் அமைதி நம் இதயங்களை ஆட்சிபுரிய வேண்டுமெனில், அன்புப் பாதையில், இரக்கத்தின் பாதையில், ஏழைகளின் தோழமையில், இயற்கையைப் பாதுகாப்பதில், வாழ்வை அமைக்க வேண்டும். இந்நிலையில், மொசாம்பிக், நம்பிக்கை நிறைந்த வருங்காலத்தைப் பெறும்.   கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இயேசு மலைப்பொழிவில், பேறுபெற்றவர் பற்றிக் கூறியதை, லூக்கா நற்செய்தியிலிருந்து  இப்போது வாசிக்கக் கேட்டோம். இயேசு தம் திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்த பின்னர், பேறுபெற்றவர்கள் பற்றி அறிவித்தார். அதில், “நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன், உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள்” (லூக். 6:27) என்றும் திருவாய்மலர்ந்தருளினார். இயேசுவின் இவ்வார்த்தைகள், இன்று நம் எல்லாருக்கும் சொல்லப்படுகின்றன. உங்களில் பலர், வன்முறை, காழ்ப்புணர்வு மற்றும் போரின் சொந்தக் கதைகளை, இன்னும், சொல்ல முடியும். இவை உங்களுக்கு அல்லது இன்று உயிரோடு இல்லாத உங்களைச் சார்ந்தவர்களுக்கு நடந்திருப்பவை. மேலும், சிலர், கடந்தகாலக் காயங்கள் மீண்டும் திறக்கக்கூடும் என்ற அச்சத்திலும் வாழலாம். பல ஆண்டுகளாக நடைபெற்ற போரின் காயங்கள் இன்னும் திறந்தநிலையில் இருக்கும்போது, ஒப்புரவு பற்றி எளிதாகப் பேச முடியாது மற்றும், மன்னிப்பை நோக்கி முயற்சிகள் எடுக்க இயலாது. இப்படியிருந்தாலும், இயேசு நம்மை புண்படுத்தியவர்களுக்கு, பாரபட்சமின்றி, மிகச்சிறந்த நன்மைத்தனத்தைக் காட்டி, அன்புகூர அழைக்கிறார்.

வெறுப்பும், பழிவாங்குதலும்

வன்முறையின் அடிப்படையில் ஒரு சமத்துவ சமுதாயத்தையோ, வருங்கால நாட்டையோ கட்டியெழுப்ப இயலாது. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற விதிமுறையில் ஒருவர் வாழ்ந்தால், அவரால் இயேசுவைப் பின்செல்ல இயலாது. ஒரு குடும்பத்தையோ, இனக்குழுவையோ, அயலவர் குழுவையோ, ஏன் ஒரு நாட்டையோ, ஒன்றிணைத்து, வேறுபாடுகளைக் களைந்து, பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கென, வெறுப்பும், பழிவாங்கும் உணர்வும் பயன்படுத்தப்பட்டால், அவற்றிற்கு வருங்காலமே கிடையாது. வன்முறையின் ஆயுதங்கள், தீர்வுகளை வழங்காமல், புதிய மற்றும், அதிக வன்மம்கொண்ட போர்களையே உருவாக்கும். வன்முறையிலிருந்து பிறக்கும் சமத்துவம், எப்போதும் மிக அதிகமான கடும் சேதங்களையேக் கொணரும். நம் மக்கள், அமைதியில் வாழ்வதற்கு உரிமையைக் கொண்டுள்ளார்கள் என்ற முக்கியமான கூற்றை மறக்காமல் இருப்பது, மற்றோர் இயலக்கூடிய பாதையாகும்.

“பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் என்ற பொன்விதியையும் இயேசு தந்துள்ளார். எனவே எதையும் எதிர்பாராமல் பிறரை அன்புகூர்வது நமக்கு மிகவும் உதவும்.  போரில்லாச்சூழலில், பிரிவினைகள் மற்றும், வன்முறைக் காலங்களை முறியடிப்பது, ஒப்புரவு அல்லது, அமைதிக்கான செயல்பாட்டிற்கு மட்டுமல்ல. மாறாக, நாம் எவ்வாறு நடத்தப்பட விரும்புகின்றோமோ, அதே இரக்கம் மற்றும் நன்மைத்தனத்தில் மற்றவரை நடத்துவதற்கு, ஒவ்வொரு நாளும் அர்ப்பணிப்பதற்கும் அழைப்பு விடுக்கின்றது.

இயற்கை, கலாச்சார வளங்கள், அமைதி

மொசாம்பிக் அளப்பரிய இயற்கை மற்றும், கலாச்சார வளங்களைக் கொண்டுள்ள நாடு. எனினும், பெரும் எண்ணிக்கையில் மக்கள் வறுமையிலும் வாடுகின்றனர். அதேநேரம், இதே நிலத்தில், ஊழலுக்கும் மக்கள் தங்களைக் கையளிக்கின்றனர் என்பது வருத்தமான செய்தி. எனவே, அரசியல் அல்லது தனிப்பட்ட ஆதாயங்களுக்காக, ஏழைகளைப் பயன்படுத்தி, அநீதியான சூழல்களை உருவாக்கும் கருத்தியல்கள், ஒருநாட்டை இயக்கிச் செல்லும் இயந்திரங்களாக அமையமாட்டா என்பதை நினைவில் பதிக்க வேண்டும். நம் இதயங்களிலும், நம் மக்களின் வாழ்விலும், வருங்காலத்திலும் அமைதி ஆட்சிபுரிய வேண்டுமெனில், கிறிஸ்துவின் அமைதி நம் இதயங்களை ஆட்சிபுரிய வேண்டுமெனில், அன்புப் பாதையில், இரக்கத்தின் பாதையில், ஏழைகளின் தோழமையில், இயற்கையைப் பாதுகாப்பதில், வாழ்வை அமைக்க வேண்டும். இந்நிலையில், மொசாம்பிக், நம்பிக்கை நிறைந்த வருங்காலத்தைப் பெறும்.   

06 September 2019, 15:53