தேடுதல்

Vatican News
சிறாருடன் திருத்தந்தை சிறாருடன் திருத்தந்தை  (ANSA)

54வது உலக சமூகத்தொடர்பு நாள்: நினைவும், வரலாறும்

பிரிவினைகள் மற்றும், பிணக்குகள் நிறைந்துள்ள, ஒரு வரலாற்றின் காலக்கட்டத்தில், சகோதரர், சகோதரிகளாக இருப்பதன் அழகைப் பகிரவும், ஒன்றிணைந்து வாழவும், பாலங்களைக் கட்டவும் திருத்தந்தை அழைப்பு விடுக்கிறார்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“நீங்கள் அதை விவரித்துச் சொல்லி, உங்கள் நினைவில் இருத்துங்கள் (வி.ப.10,2). வாழ்வு வரலாற்றை உருவாக்குகிறது” என்பது, 54வது உலக சமூகத்தொடர்பு நாளின் தலைப்பாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளார் என்று, செப்டம்பர் 28, இச்சனிக்கிழமையன்று திருப்பீடம் அறிவித்துள்ளது.

2020ம் ஆண்டில் சிறப்பிக்கப்படும், 54வது உலக உலக சமூகத்தொடர்பு நாளுக்கு, வழங்கவிருக்கும் செய்திக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விடுதலைப்பயண நூலிலிருந்து இந்த தலைப்பைத் தேர்ந்தெடுத்திருப்பதன் வழியாக, சமூகத் தொடர்பில், பாரம்பரியத்தை நினைவில் வைப்பது எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தியுள்ளார் என, திருப்பீடம் அறிவித்துள்ளது.

வரலாற்றில் நினைவுகளைப் பதிக்காமல் இருந்தால் வருங்காலமே கிடையாது என, திருத்தந்தை பலமுறைகள் சுட்டிக்காட்டியுள்ளார் என்றும், நினைவுகளின் வழியே, ஒரு தலைமுறையின் கதைகளும், நம்பிக்கைகளும், கனவுகளும், அனுபவங்களும், அடுத்த தலைமுறைக்குச் செல்கின்றன என்றும் புரிந்துகொள்வதற்கு திருத்தந்தை பலமுறைகள் நமக்கு உதவியுள்ளார்.

ஒவ்வொரு கதையும், மற்றவரோடு தொடர்புகொள்ளும் வாழ்விலிருந்து பிறக்கின்றது என்பதை, 54வது உலக உலக சமூகத்தொடர்பு நாளுக்குரிய தலைப்பு நமக்கு நினைவுபடுத்துகின்றது எனவும், இதனால், சமூகத்தொடர்பு, கதைகள் வழியாக, வாழ்வின் நினைவுகளை இணைக்கின்றது எனவும் தெரியவருகிறது.

திருத்தந்தை தேர்ந்தெடுத்துள்ள இந்த தலைப்பில், மனிதர்கள், அவர்களின் உறவுகள், தொடர்புகொள்வதற்குரிய திறமைகள் ஆகியவை மையப்படுத்தப்பட்டுள்ளன எனவும் புரிந்துகொள்ள முடிகிறது.

பிரிவினைகள் மற்றும், பிணக்குகள் நிறைந்துள்ள, ஒரு வரலாற்றின் காலக்கட்டத்தில், சகோதரர், சகோதரிகளாக இருப்பதன் அழகைப் பகிரவும், ஒன்றிணைந்து வாழவும், பாலங்களைக் கட்டவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் ஒவ்வொருவரையும், இந்த தலைப்பின் வழியாக அழைப்பு விடுத்துள்ளார்.

2020ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி, 54வது உலக உலக சமூகத்தொடர்பு நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.

28 September 2019, 14:59