தேடுதல்

Vatican News
தலை வெட்டப்பட்ட புனித திருமுழுக்கு யோவான் தலை வெட்டப்பட்ட புனித திருமுழுக்கு யோவான் 

"புனித திருமுழுக்கு யோவானே, எங்களுக்காக மன்றாடும்"

"உண்மைக்காக உயிர் துறந்ததன் வழியே, மெசியாவுக்கு ஒரு சாட்சியாகத் திகழ்ந்த புனித திருமுழுக்கு யோவானே, எங்களுக்காக மன்றாடும்" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆகஸ்ட் 29, இவ்வியாழனன்று, புனித திருமுழுக்கு யோவான் மறைசாட்சிய மரணமடைந்த நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் செய்தியை, அப்புனிதருக்கு விடுக்கப்படும் ஒரு செபமாக வெளியிட்டார்.

"உண்மைக்காக உயிர் துறந்ததன் வழியே, மெசியாவுக்கு ஒரு சாட்சியாகத் திகழ்ந்த புனித திருமுழுக்கு யோவானே, எங்களுக்காக மன்றாடும்" என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியாகப் பதிவு செய்திருந்தார்.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

ஆகஸ்ட் 29, இவ்வியாழன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2,094 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 81 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இத்துடன், @franciscus என்ற பெயரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, வெளியிடப்படும் புகைப்படங்கள், மற்றும், காணொளிகள் அடங்கிய instagram தளத்தில், இதுவரை வெளியான புகைப்படங்கள், மற்றும், காணொளிகள், 751 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 62 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

29 August 2019, 15:03