தேடுதல்

Vatican News
புனித மாக்சிமில்லியன் கோல்பே புனித மாக்சிமில்லியன் கோல்பே  

வாழ்வின் எதிர் சக்திகள் முன் சரணடையாமல்...

"நாம் இறைவனின் தனித்துவம் மிக்க அன்புக் குழந்தைகள் என்பதை நினைவில் கொள்வது, வாழ்வின் எதிர் சக்திகள் முன் நாம் சரணடையாமல் இருக்க நமக்கு வலிமையைத் தருகிறது" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆகஸ்ட் 14, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட புனித மாக்சிமில்லியன் கோல்பே அவர்களின் திருநாளையொட்டி, வாழ்வின் எதிர் சக்திகள் முன் நாம் சரணடையாமல் இறைவன் நம்மைக் காக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"நாம் இறைவனால் மறக்கப்படவில்லை என்பதையும், நாம் அவரது தனித்துவம் மிக்க அன்புக் குழந்தைகள் என்பதையும், நினைவில் கொள்ளும் அருளை, ஒவ்வொருநாளும் கேட்போம். இதை நினைவில் கொள்வது, வாழ்வின் எதிர் சக்திகள் முன் நாம் சரணடையாமல் இருக்க நமக்கு வலிமையைத் தருகிறது" என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

ஆகஸ்ட் 14, இப்புதன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2,079 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 81 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, வெளியிடப்படும் புகைப்படங்கள், மற்றும், காணொளிகள் அடங்கிய instagram தளத்தில், இதுவரை வெளியான புகைப்படங்கள், மற்றும், காணொளிகள், 746 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 62 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

14 August 2019, 14:42