தேடுதல்

Vatican News
ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டம் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டம்  (ANSA)

போரும் பயங்கரவாதமும் இழப்பையேத் தருபவை

அப்பாவி மனிதர்கள், பொதுக்கட்டடங்கள், குறிப்பாக மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள், புலம்பெயர்ந்தோர் முகாம்கள், போன்றவை பாதுகாக்கப்படுவதற்குத் தேவையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க ஒவ்வொருவரும் அழைப்புப்பெற்றுள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

போர்க்காலங்களில், போர்க்கைதிகளும், பொதுமக்களும், பாதுகாக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் ஐநா. ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் 70ம் ஆண்டு நிறைவு, இத்திங்களன்று சிறப்பிக்கப்படுவதைக் குறித்து, தன் ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் கருத்துக்களை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் குறித்த தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டபின், இந்த ஐ.நா. ஒப்பந்தம் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, ஆயுதம் தாங்கிய மோதல்களின்போது, அதனால் பாதிக்கப்படும் மக்களின் மாண்பும் உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

ஆயுதம் தாங்காத அப்பாவி மனிதர்கள், பொதுக்கட்டடங்கள், குறிப்பாக மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள், புலம்பெயர்ந்தோர் முகாம்கள், போன்றவை பாதுகாக்கப்பட, அனைத்துலக மனிதாபிமான சட்டத்தால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க ஒவ்வொருவரும் அழைப்புப்பெற்றுள்ளனர் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.

போரும் பயங்கரவாதமும் எப்போதும் மனித குலத்திக்கிற்கு மிகப்பெரும் இழப்பைத் தருபவை என்பதையும் தன் மூவேளை செப உரையின் இறுதியில் திருப்பயணிகளுக்கு நினைவூட்டி உரையை நிறைவுச் செய்தார், திருத்தந்தை  பிரான்சிஸ்

12 August 2019, 15:42