தேடுதல்

Vatican News
பற்றியெரிந்துகொண்டிருக்கும் அமேசான் காடுகள் பற்றியெரிந்துகொண்டிருக்கும் அமேசான் காடுகள்  (AFP or licensors)

அமேசான் காடுகள் இவ்வுலகின் நுரையீரல்

அமேசான் பகுதியில், 2,500 இடங்களில் காட்டுத்தீ எரிந்து கொண்டிருக்கிறது. இது திட்டமிட்டு எரியவைக்கப்பட்டதா? புவி வெப்பமடைந்து வருவதன் விளைவா?

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமேசான் பகுதியில் பெருமளவில் பற்றியெரிந்துகொண்டிருக்கும் காடுகள் உடனடியாக அணைக்கப்பட்டு காப்பாற்றப்படுவதில் அனைத்துலகச் சமுதாயமும் அக்கறைக் காட்டவேண்டும், ஏனெனில், அது இவ்வுலகின் நுரையீரல் என அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின், தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்தவர்களிடம், உலக சமுதாயத்தின் பொறுப்புணர்வு குறித்த இவ்வழைப்பை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  அமேசான் காட்டுத்தீ குறித்து தன் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார்.

பல்வேறு செய்தி நிறுவனங்களின் கூற்றுப்படி, அமேசான் பகுதியில், 2,500 இடங்களில் காட்டுத்தீ எரிந்து கொண்டிருக்கிறது. இது திட்டமிட்டு எரியவைக்கப்பட்டதா, அல்லது, புவி வெப்பமடைந்து வருவதன் விளைவா என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என செய்தி நிறுவனங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

25 August 2019, 13:05