தேடுதல்

Vatican News
லாம்பதூசா தீவுக்குச் சென்று புலம்பெயர்ந்தோரைச் சந்தித்ததன் ஆறாம் ஆண்டு நினைவு திருப்பலி லாம்பதூசா தீவுக்குச் சென்று புலம்பெயர்ந்தோரைச் சந்தித்ததன் ஆறாம் ஆண்டு நினைவு திருப்பலி  (Vatican Media)

சீடர்களின் பெயர்கள் வானகத்தில் எழுதப்பட்டுள்ளன

புலம்பெயர்ந்தோர் என்பவர்கள் மனிதப் பிறவிகள், மேலும், இன்றைய உலக மயமாக்கலில் சமூகத்தினால் ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து மக்களின் அடையாளம்'

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியின் லாம்பதூசா தீவுக்குச் சென்று புலம்பெயர்ந்தோரைச் சந்தித்த நிகழ்வின் ஆறாம் ஆண்டு நினைவை முன்னிட்டு, இத்திங்களன்று இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார்.

“தங்களை துன்புறுத்தும் தீமைகளிலிருந்து விடுவிக்கும்படி தினமும் இறைவனை நோக்கி கூக்குரலிடும், ஓரங்கட்டப்பட்ட மக்களை நோக்கி, லாம்பதூசா தீவுக்குச் சென்றதன் இந்த 6ம் ஆண்டு நினைவு நாளில்,  என் எண்ணங்கள் செல்கின்றன' என தன் முதல் டுவிட்டரில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் இரண்டாவது டுவிட்டரில், 'இது குடிபெயர்ந்தோரை பற்றியது மட்டுமல்ல, முதலில், குடிபெயர்ந்தோர் மனிதப் பிறவிகளே, மேலும், இன்றைய உலக மயமாக்கல் சமுதாயத்தினால் ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து மக்களின் அடையாளங்கள் அவர்கள்' எனக் கூறியுள்ளார், திருத்தந்தை.

மேலும், 'உங்கள் பெயர்கள் வானகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள் என இயேசு தன் சீடர்களைப் பார்த்துக் கூறியது, அதாவது இறைத்தந்தையின் இதயத்தில் அவர்கள் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன என்பது, இயேசுவின் சீடர்களுக்கு எத்தனை மகிழ்ச்சியைத் தந்தது என்பதை இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் இயேசு எடுத்துரைக்கிறார்', என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் பதிவு செய்தார்.

08 July 2019, 15:52