தேடுதல்

Vatican News
அருளாளர் மரிய தெரேசா சிராமல் மங்கிடியான் அருளாளர் மரிய தெரேசா சிராமல் மங்கிடியான் 

அக்டோபர் 13ம் தேதி, 5 அருளாளர்களுக்கு புனிதர் பட்டம்

இந்தியாவின் மரிய தெரேசா சிராமெல் மங்கிடியான் அவர்கள் உட்பட 5 அருளாளர்களுக்கு புனிதர் பட்டம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

திருஅவையில் அருளாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து பேருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்குத் தேவையான இறுதி ஒப்புதலை வழங்கும், கர்தினால்களின் அவைக்கூட்டம் ஜூலை 1, இத்திங்களன்று காலை வத்திக்கானில் திருத்தந்தையின் முன்னிலையில் இடம்பெற்றது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அருளாளரான கர்தினால் ஜான் ஹென்றி நியூமன், மற்றும், கேரளாவில் திருக்குடும்ப அருள் சகோதரிகள் சபையை நிறுவிய அருளாளரான மரிய தெரேசா சிராமல் மங்கிடியான், புனித கமில்லஸ் புதல்வியர் என்ற துறவு சபையை நிறுவிய ஜியூசப்பீனா வன்னீனி, இறை அன்னையின் அமல உற்பவ மறைபரப்புப் பணி அருள் சகோதரிகள் சபையை நிறுவிய துல்ச்சே லோப்பஸ் போன்தெஸ், அசிசி நகர் புனித பிரான்சிஸ் மூன்றாம் சபையைச் சேர்ந்த அருள் சகோதரி மார்கரீத்தா பேய்ஸ் ஆகிய ஐந்து அருளாளர்களை புனிதர்களாக உயர்த்தும் இறுதி ஒப்புதல் இத்திங்களன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஐந்து அருளாளர்களும், வரும் அக்டோபர் மாதம் 13ம் தேதி ஞாயிறன்று புனிதர்களாக உயர்த்தப்படுவர் எனவும், திருத்தந்தையின் முன்னிலையில் இடம்பெற்ற கர்தினால்கள் அவைக் கூட்டம் அறிவித்தது.

01 July 2019, 15:32