தேடுதல்

Vatican News
அத் லிமினா சந்திப்பில் பிலிப்பீன்ஸ் ஆயர்கள் அத் லிமினா சந்திப்பில் பிலிப்பீன்ஸ் ஆயர்கள்  

அத் லிமினா சந்திப்பில் 29 பிலிப்பீன்ஸ் ஆயர்கள்

திருப்பீடத்திற்குரிய பிரான்ஸ் நாட்டுப் புதிய தூதர் Elizabeth Beton Delègue அவர்களிடமிருந்து, பணி நியமின ஆவணத்தைப் பெற்றுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

இறைவன் நமது குரலுக்கு எவ்வாறு செவிமடுக்கிறார் என்பது பற்றி, ஜூன் 07, இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“ஆண்டவர் எனது குரலுக்குச் செவிசாய்க்கிறார் என்பதை நான் அறிந்துகொள்வது எப்படி? அதை உறுதிசெய்வதற்கு நமக்கு ஒருவர் இருக்கிறார். அவர்தான் இயேசு. அவர், மாபெரும் பரிந்துரையாளர். அவர் விண்ணகம் சென்றுள்ளார் மற்றும், இறைத்தந்தையிடம் நமக்காகப் பரிந்து பேசுகிறார். அவரின் பரிந்துரை செபம், முடிவில்லாதது” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் பதிவாகியுள்ளன.

மேலும், ஜூன் 07, இவ்வெள்ளி காலையில், வத்திக்கானில், திருப்பீடத்திற்குரிய பிரான்ஸ் நாட்டுப் புதிய தூதர் Elizabeth Beton Delègue அவர்களிடமிருந்து, பணி நியமின ஆவணத்தைப் பெற்றுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், அத் லிமினா சந்திப்பையொட்டி, பிலீப்பீன்ஸ் நாட்டு ஆயர்கள் 29 பேரை, ஜூன் 07, இவ்வெள்ளி முற்பகலில் வத்திக்கானில் சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பிலிப்பீன்ஸ் ஆயர்களைச் சந்திப்பதற்கு முன்னதாக, தனது பணியை நிறைவுசெய்யும், திருப்பீடத்திற்குரிய கீரிஸ் நாட்டுத் தூதர் Alexandros Couyou அவர்களையும் சந்தித்து, வாழ்த்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

07 June 2019, 15:36