தேடுதல்

Vatican News
திருஅவை அதிகாரிகளுடன் திருத்தந்தை திருஅவை அதிகாரிகளுடன் திருத்தந்தை  (ANSA)

வாழ்வை அதன் இயல்பு நிலைகளோடு ஏற்போம்

C-9 கர்தினால்கள் அவையின் முப்பதாவது கூட்டம் திருத்தந்தையின் முன்னிலையில் வத்திக்கானில் இடம்பெற்றுவருகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :  வத்திக்கான் செய்திகள்

இறைவனுக்கு நாம் 'ஆம்' என உரைப்பது, வாழ்வை, அதன் இயல்பு நிலைகளோடு ஏற்பதைக் குறிக்கும் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

'வாழ்வு அதன் முரண்பாடுகளோடும், சிறுமைகளோடும், தோல்விகளோடும் வரும்போது, அதனை அன்போடும் மனவுறுதியோடும் ஏற்றுக்கொள்வதே, இறைவனுக்கு நாம் சொல்லும், 'ஆம்' என்ற சொல்லின் பொருளாகும்', என்று தன் இச்செவ்வாய்க்கிழமை டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஆலோசனை வழங்க உருவாக்கப்பட்டுள்ள C-9 எனப்படும் கர்தினால்கள் குழுவின் முப்பதாவது கூட்டம், ஜூன் 25, இச்செவ்வாய்க்கிழமை முதல் வியாழன் வரை, திருத்தந்தையின் முன்னிலையில் வத்திக்கானில் இடம்பெற்று வருகிறது.

இதற்கு முந்தைய 29வது கூட்டம், இவ்வாண்டு, ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத் துவக்கத்தில் இடம் பெற்றது.

25 June 2019, 16:30