தேடுதல்

Vatican News
புனித பூமி புனித பூமி 

புனித பூமியின் அமைதிக்காக ஜூன் 08ல் ஒரு நிமிட செபம்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத் தலைவர்கள் வத்திக்கானில் சந்தித்ததன் ஐந்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, வருகிற சனிக்கிழமை பகல் ஒரு மணிக்கு, ஒரு நிமிடம் அமைதிக்காகச் செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஜூன் 05, இப்புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐந்தாண்டுகளுக்கு முன்னர் வத்திக்கானில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய அரசுத்தலைவர்கள், தன்னையும் முதுபெரும்தந்தை பர்த்தலோமேயு அவர்களையும் சந்தித்ததை நினைவுகூர்ந்தார். வரும் சனிக்கிழமையன்று, அதாவது, இம்மாதம் 8ம் தேதி தன் ஐந்தாம் ஆண்டை நிறைவுசெய்யும் இந்நிகழ்வை மனதில்கொண்டு, அந்நாளில் நண்பகல் ஒரு மணிக்கு, அமைதிக்கென, உடன்பிறந்த உணர்வுடன்கூடிய ஓர் உலகை உருவாக்க, இணைந்து செபிப்போம். இந்த செப நேர நடவடிக்கைக்கு ஊக்கமளிக்கும் உலக கத்தோலிக்க இயக்கத்திற்கு நன்றி உரித்தாகுக, என உரைத்து, வரும் ஞாயிறன்று திருஅவையில் சிறப்பிக்கப்படும் பெந்தக்கோஸ்து பெருவிழாவை நினைவூட்டி, தன் மறைக்கல்வி உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை. பின் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்

05 June 2019, 14:56