தேடுதல்

Vatican News
மூவேளை செப உரை மூவேளை செப உரை  (AFP or licensors)

உரோம் குடிமக்களுக்கு திருத்தந்தை வாழ்த்து

கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தையின் பிரதிநிதிகள் குழுவுக்கும், முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்களுக்கும், நல்வாழ்த்துக்கள்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஜூன் 29, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட, உரோம் நகரின் பாதுகாவலர்களான, புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவன்று வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில், உரோம் நகர குடிமக்களுக்கும், இந்நகரில் வாழ்கின்றவர்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துரதிஷ்டவசமாக, உரோம் நகரில் நிலவும் அறநெறி மற்றும் பொருளியச் சீரழிவுக்கு எதிராய், குடிமக்கள் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவையொட்டி, வத்திக்கான் வந்துள்ள, கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தையின் பிரதிநிதிகள் குழுவுக்கும், முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்களுக்கும், தனது வாழ்த்தையும், நன்றியையும் திருத்தந்தை தெரிவித்தார்.

இப்பெருவிழாவுக்காக, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தை மலர்களால் அலங்கரித்தவர்களுக்கும், இன்னும், பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகளுக்கும் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

29 June 2019, 13:00