தேடுதல்

Vatican News
ஏழு மறைசாட்சி ஆயர்களை, அருளாளர்களாக அறிவித்த இறைவழிபாடு ஏழு மறைசாட்சி ஆயர்களை, அருளாளர்களாக அறிவித்த இறைவழிபாடு  (Vatican Media)

பிளாஜ் நகரில் அல்லேலூயா வாழ்த்தொலி உரை

ருமேனியாவில் இந்நாள்களில் சிறப்பான வரவேற்பளித்த, அரசுத்தலைவர் மற்றும் ஏனைய அரசு அதிகாரிகளுக்கு நன்றி. ருமேனிய ஆர்த்தடாக்ஸ் சபையினர் மற்றும், கிரேக்க-கத்தோலிக்கத் திருஅவையினர் என, எல்லாருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஜூன் 02, இச்சனிக்கிழமையன்று, ருமேனியாவின் பிளாஜ் நகரில், ஏழு மறைசாட்சி ஆயர்களை, அருளாளர்களாக அறிவித்த இறைவழிபாட்டின் இறுதியில், அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். அன்புச் சகோதரர், சகோதரிகளே, ருமேனியாவில் இந்நாள்களில் சிறப்பான வரவேற்பளித்த, இங்கு அமர்ந்திருக்கின்ற அரசுத்தலைவர் மற்றும் ஏனைய அரசு அதிகாரிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். முதுபெரும்தந்தை டானியேல் அவர்கள், ஆர்த்தடாக்ஸ் மாமன்றம், அச்சபை அருள்பணியாளர்கள் மற்றும் விசுவாசிகள் எல்லாரும், உடன்பிறந்த உணர்வுடன் அளித்த வரவேற்பிற்கு நன்றி. இந்தப் பழமையான மற்றும் சிறப்புவாய்ந்த திருஅவை மற்றும் அதன் பணியை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக. மேலும், கத்தோலிக்க முதுபெரும்தந்தை கர்தினால் Lucian Mureşan அவர்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், மற்றும் விசுவாசிகளுக்கும் நன்றி. உங்களோடு சேர்ந்து செபித்து, உங்களின் நற்செய்திப் பணியையும், பிறரன்பின் சான்றுகளையும் ஊக்குவிப்பதற்கு கிடைத்த வாய்ப்புக்கு நன்றி.  மூன்று நூற்றாண்டுகளாக, திருத்தூது ஆர்வத்துடன் விசுவாசத்திற்குச் சான்று பகர்ந்த கிரேக்க-கத்தோலிக்க திருஅவையின் பிள்ளைகளுக்கு, மறைசாட்சியம், விடுதலை மற்றும் இரக்கத்தின் பூமியாகிய இந்த பிளாஜ் நகரில் மரியாதை செலுத்துகிறேன். அன்னை மரியா, ருமேனிய குடிமக்கள் அனைவருக்கும் தாய்க்குரிய பாதுகாப்பை அருளுவாராக. நீதியிலும், உடன்பிறந்த உணர்விலும் உங்கள் நாட்டைக் கட்டியெழுப்பவும், வருங்காலத்தில் உண்மையான முன்னேற்றம் மற்றும் அமைதியை நோக்கிச் செல்லவும்,  உங்கள் விசுவாசப் பயணத்தில் உங்களோடு துணைவர, அன்னை மரியாவிடம் உங்களை அர்ப்பணிக்கின்றேன். இவ்வாறு தனது உரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

02 June 2019, 15:00