தேடுதல்

Vatican News
சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை ஆயர்கள் சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை ஆயர்கள் 

Pathanamthitta சீரோ-மலங்கரா மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்

Pathanamthitta சீரோ-மலங்கரா மறைமாவட்டத்தின் புதிய ஆயர் சாமுவேல் மார் இரேனியோஸ் அவர்கள், அதே மறைமாவட்டத்தின் வாரிசுரிமை ஆயராகப் பணியாற்றி வந்தவர்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் Pathanamthitta சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 07, இவ்வெள்ளியன்று இசைவு தெரிவித்துள்ளார்.

சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை மாமன்றம், Pathanamthitta சீரோ-மலங்கரா மறைமாவட்டத்தின் ஆயர் யோஹானன் மார் கிறிஸ்சோஸ்தம் (கல்லூர்) அவர்களின் பதவி விலகலை ஏற்று, அம்மறைமாவட்டத்திற்கு, அருள்பணி சாமுவேல் மார் இரேனியோஸ் (காட்டுக்கல்லில்) அவர்களை, புதிய ஆயராகத் தேர்ந்தெடுத்துள்ளது.

சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை மாமன்றத்தின் இந்தத் தெரிவுக்கு, இசைவு தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கேரளாவின் Kadammanittaவில், 1952ம் ஆண்டு மே 13ம் தேதி பிறந்த இவர், 1978ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

கேரளாவின் திருவனந்தபுரம் சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை உயர்மறைமாவட்டத்தின் முதன்மை குருவாக, 2007ம் ஆண்டு முதல், 2010ம் ஆண்டுவரை இவர் பணியாற்றினார். 2010ம் ஆண்டு சனவரி 25ம் தேதி, அதே உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமிக்கப்பட்ட, புதிய ஆயர் சாமுவேல் அவர்கள், 2018ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி, Pathanamthitta சீரோ-மலங்கரா மறைமாவட்டத்தின் வாரிசுரிமை ஆயராக நியமிக்கப்பட்டார்.

07 June 2019, 15:25