தேடுதல்

Vatican News
ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 

விண்ணேற்றம், ருமேனியப் பயணம் - திருத்தந்தையின் டுவிட்டர்

நாளை நான் ருமேனியாவுக்கு ஒரு திருப்பயணியாகச் செல்வேன். தயவுசெய்து எனக்காக செபிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மே 30, இவ்வியாழனன்று, வத்திக்கானில் சிறப்பிக்கப்பட்ட இயேசுவின் விண்ணேற்பு விழாவை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் முதல் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

"நம் பயணத்தின் நோக்கம் வானகத்தந்தையே என்பதை நமக்கு உணர்த்தும் வண்ணம், உயிர்த்த இயேசு, தன் விண்ணேற்றத்தின் வழியாக, நம் பார்வையை, வானகம் நோக்கி ஈர்க்கிறார்" என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியாகப் பதிவு செய்திருந்தார்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 31ம் தேதி, இவ்வெள்ளியன்று, தன் 30வது திருத்தூதுப்பயணத்தை ருமேனியா நாட்டிற்கு மேற்கொள்ளவிருப்பதையொட்டி, தனக்காகச் செபிக்கும்படி மக்களிடம் விண்ணப்பிக்கும்வண்ணம் இரண்டாவது டுவிட்டர் செய்தியை இவ்வியாழனன்று வெளியிட்டார்.

"ருமேனிய ஆர்த்தடாக்ஸ் சபையைச் சார்ந்த நம் சகோதரர்களுடனும், கத்தோலிக்க விசுவாசிகளுடனும் இணைந்து நடப்பதற்கு, நாளை நான் ருமேனியாவுக்கு ஒரு திருப்பயணியாகச் செல்வேன். தயவுசெய்து எனக்காக செபிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் வெளியாயின.

30 May 2019, 14:19