தேடுதல்

Vatican News
உரோம் மறைமாவட்ட பேரவைக்கு உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் உரோம் மறைமாவட்ட பேரவைக்கு உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

உரோம் நகரின் குரலுக்குச் செவிசாய்த்து பணியாற்றுங்கள்

உரோம் நகரின் ஒவ்வொரு பங்குத்தளத்திலும் மக்கள் வாழ்கின்ற முறை, அவர்களின் உணர்வுகள், எண்ணங்கள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு, பணியாற்றுமாறு அருள்பணியாளர்களிடம் திருத்தந்தை கூறினார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

உரோம் நகரின் குரலுக்குச் செவிசாய்த்து பணியாற்றுமாறு, உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர்களிடம், மே 9, இவ்வியாழனன்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 9, இவ்வியாழன் மாலையில், உரோம் இலாத்தரன் பசிலிக்காவில், உரோம் மறைமாவட்ட பேரவையை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மறைமாவட்டத்தின் மேய்ப்புப்பணி பயணத்தை மையப்படுத்தி, இரு கருத்துக்களை வலியுறுத்திப் பேசினார்.

கடந்தகாலத்தின் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் ஒப்புரவுக்குத் திறந்த மனம் கொண்டவர்களாய் வாழ வேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, தூய ஆவியாரின் குரலுக்குச் செவிசாய்த்து நடக்குமாறு கேட்டுக்கொண்டார்.

வருங்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடினமான சூழல்களில் படகைத் தள்ளுவதற்கு அஞ்சினால், நற்செய்தி அறிவிப்பாளர்களாக நம்மால் செயல்பட முடியாது என்றும் கூறினார்.

விசுவாசிகள் வளருவதை அனுமதிப்பதற்கு உதவியாக, அவர்களுக்கு, இயேசுவின் மலைப்பொழிவு நற்பேறுகள் முக்கியமாக வழங்கப்பட வேண்டும் என்றும், குருக்களே எப்போதும் மையப்படுத்தப்பட வேண்டும் என்ற போக்கு குறித்து எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர்களிடம் கூறினார்.

10 May 2019, 16:22