தேடுதல்

Vatican News
சீனக் கத்தோலிக்கர் சீனக் கத்தோலிக்கர்  

சீனக் கத்தோலிக்கருக்காக திருத்தந்தை செபம்

சீன கத்தோலிக்கர், ஒவ்வொரு நாளும், சோர்வுகளும் துன்பங்களும் இருந்தபோதிலும், தொடர்ந்து தங்கள் நம்பிக்கையை இழக்காமல், எதிர்பார்ப்புகளுடனும் அன்புகூர்தலிலும் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர் - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மே 24, வருகிற வெள்ளியன்று திருஅவையில் குறிப்பாக, சீனாவில் சிறப்பான விதத்தில், Sheshan நமதன்னை திருத்தலத்தில் கொண்டாடப்படும், 'கிறிஸ்தவர்களின் சகாய அன்னை மரியாவின் திருவிழா குறித்து, புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் நினைவூட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ். ஒவ்வொரு நாளும், சோர்வுகளும் துன்பங்களும் இருந்தபோதிலும், தொடர்ந்து தங்கள் நம்பிக்கையை இழக்காமல், எதிர்பார்ப்புகள் மற்றும், அன்புகூர்தலிலும் தொடர்ந்து வாழும் சீன கத்தோலிக்கர் அனைவருடனும், என் அன்பையும் அருகாமையையும் வெளிப்படுத்தும் வாய்ப்பை இந்நாளில் பெறுகிறேன்.

சீன கத்தோலிக்கர்களே! நீங்கள் அனைவரும் பிறரன்பின், மற்றும், உடன்பிறந்த உணர்வின் சாட்சிகளாக விளங்கவும், எப்போதும் அனைத்துலக கத்தோலிக்கத் திருஅவையோடு ஒன்றிப்பில் வாழவும், விண்ணுலகிலுள்ள நம் தாயாம் அன்னை மரியா உதவுவாராக, நான் உங்களுக்காகச் செபிக்கிறேன், மற்றும், ஆசீர் வழங்குகிறேன். இப்போது ஒன்றிணைந்து 'வாழ்க மரியே' என்ற செபத்தை செபிப்போம். இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் கூறினார்.

22 May 2019, 15:42