தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் வெளியாகும் @pontifex வலைத்தளப் பக்கம் - கோப்புப் படம் திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் வெளியாகும் @pontifex வலைத்தளப் பக்கம் - கோப்புப் படம்  

தவக்காலத்தை மையப்படுத்தி 3 டுவிட்டர் செய்திகள்

'இதயத்தை மரத்துப்போக வைக்கும் உலகப் போக்குகளிலிருந்தும், பொருள்கள் மீது கொள்ளும் பற்றிலிருந்தும், தவக்கால உண்ணா நோன்பு நமக்கு விடுதலையளிக்கிறது' – திருத்தந்தையின் டுவிட்டர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தவக்காலத்தில் நமக்கு விடப்படும் அழைப்புகள், தவக்காலத்தால் ஏற்படும் பயன்கள் ஆகியவை குறித்து இஞ்ஞாயிறு, மற்றும், திங்கள் ஆகிய இருநாள்களின் டுவிட்டர் செய்திகளில் எடுத்துரைத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'இதயத்தை மரத்துப்போக வைக்கும் உலகப் போக்குகளிலிருந்தும், பொருள்கள் மீது கொள்ளும் பற்றிலிருந்தும், தவக்கால உண்ணா நோன்பு நமக்கு விடுதலையளிக்கிறது' என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று இடம்பெற்றிருந்தன.

'செபத்துடன் மேல் நோக்கிப் பார்க்க நமக்கு அழைப்பு விடுக்கிறது தவக்காலம். நாம் இறைவனை மறந்து, நம் சுயநலத்தில் மட்டும் நேரத்தைச் செலவிடும் சுவையற்ற ஒரு வாழ்விலிருந்து நமக்கு விடுதலை வழங்குகிறது தவக்கலாம்' என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 7, ஞாயிறன்று வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியாக அமைந்திருந்தது.

தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'நமக்கு நன்மை தருபவைகளே நல்லவை என்ற எண்ணப்போக்கிலிருந்தும், உடைமைகளைச் சேர்க்கும் மாயையிலிருந்தும் விடுதலையை வழங்கும், பிறரன்புடன் மற்றவர்களை நோக்கவேண்டும் என தவக்காலம் அழைப்பு விடுக்கிறது' என எழுதியுள்ளார்.

ஏப்ரல் 8, இத்திங்கள் முடிய, @pontifex என்ற வலைத்தள முகவரியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1.934 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 80 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

08 April 2019, 16:09