தேடுதல்

Vatican News
"நமது களைப்பு இயேசுவுக்கு விலைமதிப்பற்றது" – திருத்தந்தை வழங்கிய மறையுரைகளின் தொகுப்பு "நமது களைப்பு இயேசுவுக்கு விலைமதிப்பற்றது" – திருத்தந்தை வழங்கிய மறையுரைகளின் தொகுப்பு  (Vatican Media)

"நமது களைப்பு இயேசுவுக்கு விலைமதிப்பற்றது" – மறையுரைத் தொகுப்பு

"நமது களைப்பு இயேசுவுக்கு விலைமதிப்பற்றது - புனித எண்ணெய் திருப்பலிகளில் மறையுரைகள்" என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரைகளின் தொகுப்பை, அருள்பணியாளருக்கு பரிசாக வழங்கினார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

2013ம் ஆண்டு முதல், இவ்வாண்டு முடிய ஏழு முறை, புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலிகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள மறையுரைகளின் தொகுப்பு, ஒரு நூலாக ஏப்ரல் 18, புனித வியாழனன்று வெளியானது.

"நமது களைப்பு இயேசுவுக்கு விலைமதிப்பற்றது - புனித எண்ணெய் திருப்பலிகளில் மறையுரைகள்" என்ற தலைப்பில், வெளிவந்துள்ள இந்த நூலை, ஏப்ரல் 18, இவ்வியாழனன்று புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலியில் கலந்துகொண்ட அனைத்து அருள்பணியாளருக்கும் திருத்தந்தை பரிசாக வழங்கினார்.

அருள்பொழிவு, அருள்பணியாளரின் வாழ்வு, அப்பணியில் தொடர்ந்து நிலைத்திருக்க உந்து சக்தி ஆகியவற்றை வழங்க இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது என்று, இந்நூலை வெளியிட்ட வத்திக்கான் பதிப்பகம் கூறியுள்ளது.

2013ம் ஆண்டு வழங்கப்பட்ட மறையுரை, 'ஆடுகளின் மணத்துடன் வாழும் ஆயர்கள்' என்ற தலைப்பிலும், 2014ம் ஆண்டு, 'மகிழ்வின் தைலத்தால் அருள்பொழிவு பெற்று' என்ற தலைப்பிலும், 2015ம் ஆண்டு, "நமது களைப்பு தந்தையின் இதயத்திற்கு நேராகச் செல்கிறது' என்ற தலைப்பிலும், 2016ம் ஆண்டு, 'இரக்கத்தின் சாட்சிகள் மற்றும் பணியாளர்கள்' என்ற தலைப்பிலும், 2017ம் ஆண்டு, 'மகிழ்வான பறைசாற்றுதல்' என்ற தலைப்பிலும், 2018ம் ஆண்டு, 'இறைவனின் மக்களுக்கு அருகே' என்ற தலைப்பிலும், இவ்வாண்டு வழங்கப்பட்ட மறையுரை 'அருள்பொழிவு வழங்க அருள்பொழிவு பெற்றவர்கள்' என்ற தலைப்பிலும் வெளியிடப்பட்டுள்ளன.

18 April 2019, 12:33