தேடுதல்

Vatican News
திருத்தந்தையைச் சந்தித்த லித்துவேனிய அரசுத்தலைவரும் அரசு அதிகாரிகளும் திருத்தந்தையைச் சந்தித்த லித்துவேனிய அரசுத்தலைவரும் அரசு அதிகாரிகளும்  (Vatican Media)

திருத்தந்தையைச் சந்தித்த லித்துவேனிய அரசுத்தலைவர்

மார்ச் 28, இவ்வியாழன் காலை 10 மணிக்கு, லித்துவேனியக் குடியரசின் அரசுத்தலைவர் Dalia Grybauskaite அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மார்ச் 28, இவ்வியாழன் காலை 10 மணிக்கு, லித்துவேனியக் குடியரசின் அரசுத்தலைவர் Dalia Grybauskaite அவர்கள், தன் அரசைச் சார்ந்த மற்ற உயர் அதிகாரிகளுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

கடந்த ஆண்டு, லித்துவேனியா சுதந்திரம் அடைந்ததன் 100ம் ஆண்டை சிறப்பித்த வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நாட்டிற்கு, செப்டம்பர் மாதம், திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட நிகழ்வை அரசுத் தலைவர் Grybauskaite அவர்கள், நன்றியோடு நினைவுக்கூர்ந்தார்.

அரசுத்தலைவர் Grybauskaite அவர்கள், திருத்தந்தையை சந்தித்துப் பேசிய பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்  அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

லித்துவேனியக் குடியரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், அந்நாட்டின் கல்வி மற்றும், நலவாழ்வுத் துறைகளில், கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் நற்பணிகள் ஆகியவை குறித்த நிறைவானச் சூழலைக் குறித்து, இச்சந்திப்புகளில் பகிர்ந்துகொள்ளப்பட்டன என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.

லித்துவேனியக் குடியரசுத் தலைவருடன் நிகழ்ந்த இச்சந்திப்பைத் தொடர்ந்து, இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் குவால்தியேரோ பஸ்ஸெத்தி அவர்களையும், உரோம் நகரின் குழந்தை இயேசு மருத்துவமனையின் தலைவர், மரியெல்லா ஈனோக் அவர்களையும் இவ்வியாழனன்று காலை, திருப்பீடத்தில் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

28 March 2019, 13:55