தேடுதல்

Vatican News
இளையோர் நிகழ்வில் வெனெசுவேலாவுக்காக செபம் இளையோர் நிகழ்வில் வெனெசுவேலாவுக்காக செபம் 

வெனெசுவேலாவுக்காக திருத்தந்தை செபம்

வெனெசுவேலா மக்களின் துன்பங்கள் அகற்றப்பட எடுக்கப்படும் எல்லா முயற்சிகளுக்கும் திருத்தந்தை ஆதரவு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பானமாவில் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டு வந்தாலும், துன்புறும் வெனெசுவேலா நாட்டு மக்களையும் மறக்காமல், அந்நாட்டிற்காகச் செபிக்கின்றார் என, திருப்பீடச் செய்தி தொடர்பகத்தின் இடைக்கால இயக்குனர் அலெஸ்ஸாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள் தெரிவித்தார். வெனெசுவேலா மக்களின் துன்பங்கள் மேலும் அதிகரிக்காவண்ணம் எடுக்கப்படும் எல்லா முயற்சிகளுக்கும் திருத்தந்தை ஆதரவு வழங்குவதாகவும், அந்நாட்டில் இடம்பெறும் வன்முறையில் இறந்தவர்களுக்காகச் செபிப்பதாகவும், ஜிசோத்தி அவர்கள் தெரிவித்தார். தென் அமெரிக்க நாடான வெனெசுவேலாவில் எதிர்க்கட்சித்தலைவர், தன்னை இடைக்கால அரசுத்தலைவர் என அறிவித்துள்ளார். இதற்கு, உலக அளவில் சில நாடுகள் ஆதரவளித்து வருகின்றன. அந்நாட்டின் தற்போதைய அரசுத்தலைவர் நிக்கோலாஸ் மாதுரோ அவர்களுக்கு, இராணுவம் உட்பட சில நாடுகள் ஆதரவளித்து வருகின்றன. இந்நிலையில் அந்நாட்டில் பதட்டநிலைகள் அதிகரித்து வருகின்றன என செய்திகள் தெரிவிக்கின்றன

25 January 2019, 15:16