தேடுதல்

இத்தாலிய செனட் அவை தலைவர், மரிய எலிசபெத்தா அல்பெர்த்தி கசெல்லாத்தி இத்தாலிய செனட் அவை தலைவர், மரிய எலிசபெத்தா அல்பெர்த்தி கசெல்லாத்தி  

நாம் பெற்றவைகளுள் உயரிய கொடை, நம் திருமுழுக்கு

நம்மால் பிறருக்கு எதை இலவசமாகக் கொடுக்கமுடியும் என சிறிது சிந்தித்துப் பார்ப்போம் – திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இலவசமாக நாம் பிறருக்கு வழங்கக்கூடிய கொடைகள் குறித்து சிறிது சிந்தித்துப் பார்ப்போம் என இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'நம் கைகளை உற்று நோக்குவோம். பெரும்பாலும் அவை, அன்பின்றி வெறுமையாகவே உள்ளன. இன்று நம்மால் பிறருக்கு எதை கொடையாக வழங்க முடியும் என்பதை எண்ணிப் பார்க்க முயல்வோம்' என்பதாக, திருத்தந்தை இத்திங்களன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தி அமைந்திருந்தது.

மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இயேசுவின் திருமுழுக்கு விழாவை முன்னிட்டு வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 'நாம் பெற்றவைகளுள் உயர்ந்த கொடை நம் திருமுழுக்கு. திருமுழுக்கின் வழியாக நாம் கடவுளுக்கு சொந்தமானவர்களாகிறோம், மற்றும், மீட்பின் மகிழ்ச்சியைக் கொண்டுள்ளோம்' என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐ.நாவிற்கான திருப்பீடத்தின் தூதுவர், பேராயர் பெர்னதித்தோ அவுசா, ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. அவைக் கூட்டங்களில் திருப்பீடப் பிரதிநிதியாகப் பங்கேற்கும், பேராயர் இவான் யுர்கோவிச், இத்தாலிய செனட் அவை தலைவர், மரிய எலிசபெத்தா அல்பெர்த்தி கசெல்லாத்தி ஆகியோரையும் சந்தித்து உரையாடினார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 January 2019, 15:47