தேடுதல்

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கிறிஸ்மஸ் இசைக் கச்சேரி வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கிறிஸ்மஸ் இசைக் கச்சேரி  

புனித ஸ்தேவான் திருவிழா வாழ்த்துக்கள்

இயேசுவுக்காக தங்கள் வாழ்வைக் கையளித்த இருபால் மறைசாட்சிகளின் குருதியால் திருஅவை வளர்கிறது – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இந்நாள்களில், உரோம் நகரிலிருந்தும், உலகின் ஏனைய பகுதிகளிலிருந்தும் நல்வாழ்த்துக்களை அனுப்பிய அனைவருக்கும், நெஞ்சார்ந்த நன்றிகள் என்று, மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்நாள்களில் உலகின் பல பகுதிகளிலிருந்து, ஏராளமான மக்களிடமிருந்து செபம் நிறைந்த நல்வாழ்த்துக்களைப் பெற்றேன், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகப் பதில் அனுப்ப இயலாது என்பதால், இவ்வேளையில், அனைவருக்கும், குறிப்பாக செபம் என்ற பரிசை வழங்கியதற்கும், நன்றி சொல்கிறேன் என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்மஸ் குடிலில், குழந்தை இயேசுவை தியானிப்பது, குடும்பங்களிலும், சமூகங்களிலும், உடன்பிறப்பு மற்றும் பகிர்வு மனப்பான்மையைத் தூண்டுவதாய் இருக்க வேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, இத்தாலி மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கும் அனைத்து திருப்பயணிகளையும் வாழ்த்துவதாகக் கூறினார்.

டிசம்பர் 26, இப்புதனன்று சிறப்பிக்கப்படும் புனித ஸ்தேவான் திருவிழாவுக்கு வாழ்த்துக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகச் செபிக்க மறக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும், திருஅவையின் முதல் மறைசாட்சியான புனித ஸ்தேவான் திருவிழாவை மையப்படுத்தி, டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ள, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவுக்காக தங்கள் வாழ்வைக் கையளித்த ஆண் மற்றும் பெண் மறைசாட்சிகளின் குருதியால் திருஅவை வளர்கிறது என்று தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகளுக்கு வராமல் இருந்தாலும்கூட, இன்றும் ஏராளமான மறைசாட்சிகள் உள்ளனர் என்ற சொற்களையும், திருத்தந்தை, தன் டுவிட்டரில் பதிவுசெய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 December 2018, 13:00