தேடுதல்

எகிப்தின் கீஸா பிரமிடு பகுதியில், தாக்குதலுக்கு உள்ளான சுற்றுலா பயணிகள் பேருந்து எகிப்தின் கீஸா பிரமிடு பகுதியில், தாக்குதலுக்கு உள்ளான சுற்றுலா பயணிகள் பேருந்து 

எகிப்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு திருத்தந்தையின் அனுதாபம்

எகிப்தின் கீஸா (Giza) பிரமிடு பகுதியில், சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோருக்காகவும், காயமுற்றோருக்காகவும் தன் அனுதாபங்களை வெளியிட்டு, திருத்தந்தை, தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

டிசம்பர் 30, இஞ்ஞாயிறன்று கொண்டாடப்பட்ட திருக்குடும்பத் திருவிழாவை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், "உலகெங்கிலும் உள்ள எல்லா குடும்பங்களையும் இயேசு, மரியா, யோசேப்பு ஆகிய மூவரும் ஆசீர்வதித்து, காப்பார்களாக, இதனால், அனைத்து குடும்பங்களிலும் அன்பு, மகிழ்வு மற்றும் அமைதி ஆட்சி செலுத்துவதாக" என்ற சொற்களைப் பதிவு செய்திருந்தார்.

மேலும், டிசம்பர் 28, இவ்வெள்ளியன்று, எகிப்தின் கீஸா (Giza) பிரமிடு பகுதியில், சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோருக்காகவும், காயமுற்றோருக்காகவும் தன் அனுதாபங்களை வெளியிட்டு, திருத்தந்தை, தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.

எகிப்து அரசுத்தலைவர் Abdel Fattah Al Sisi அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரால், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள இத்தந்தியில், மதியற்ற இந்த வன்முறையை கண்டனம் செய்வதாகவும், இந்த இக்கட்டானச் சூழலில் பணியாற்றுவோரை பாராட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெள்ளியன்று மாலை, கீஸா பிரமிடு பகுதியில் நடைபெறவிருந்த ஒலி-ஒளி காட்சியைக் காணச் சென்ற பயணிகள் பேருந்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், 4 பேர் கொல்லப்பட்டனர், மற்றும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்ட நால்வரில் மூவர், வியட்நாம் நாட்டவர் என்றும், மற்றொருவர், பயண வழிகாட்டி என்றும், இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு குழுவும் பொறுப்பெற்கவில்லை எனவும் செய்திகள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 December 2018, 11:56