தேடுதல்

டிசம்பர் 16, மகிழும் ஞாயிறன்று திருத்தந்தை வழங்கிய முவேளை செப உரை டிசம்பர் 16, மகிழும் ஞாயிறன்று திருத்தந்தை வழங்கிய முவேளை செப உரை 

மகிழும் ஞாயிறன்று திருத்தந்தையின் முவேளை செப உரை

உலகிற்கு அறிமுகமாகாமல், ஒரு சிறு கிராமத்தில் வாழ்ந்த இளம்பெண்ணின் உள்ளத்தில், உலகை ஒளிமயமாக்கும் மகிழ்வை, இறைவன் ஏற்றிவைத்தார் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கலிலேயாவில் யாரும் அறியாத ஒரு சிறு கிராமத்தில், உலகிற்கு அறிமுகமாகாத ஓர் இளம்பெண்ணின் உள்ளத்தில், உலகை ஒளிமயமாக்கும் மகிழ்வை இறைவன் ஏற்றிவைத்தார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மூவேளை செப உரையில் கூறினார்.

டிசம்பர் 16, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட மகிழும் ஞாயிறன்று, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு திருத்தந்தை வழங்கிய நண்பகல் மூவேளை செப உரையில் இவ்வாறு கூறினார்.

இறை மகனை மகிழ்வுடன் வரவேற்க இளம்பெண் மரியா பெற்ற அதே அழைப்பு, இன்று திருஅவை முழுமைக்கும் வழங்கப்படுகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

இறைவன் நம் வாழ்வை வழிநடத்துகிறார் என்ற உறுதிப்பாட்டை நாம் உணர்ந்தால், எந்தக் கவலையும், அச்சமும் நம் உள்ளத்து அமைதியைக் குலைத்துவிடாது என்று திருத்தந்தை தன் மூவேளை செப உரையில் வலியுறுத்திக் கூறினார்.

"நாங்கள் என்ன செய்யவேண்டும்?" என்று மக்கள் திருமுழுக்கு யோவானிடம் கேட்டதுபோல், நாமும் இந்த திருவருகைக் காலத்தில், நாம் ஆற்றவேண்டிய கடமைகளைக் குறித்து, இறைவனிடம் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும் என்று எடுத்துரைத்தத் திருத்தந்தை, நமது உள்ளத்தை மகிழ்வுடன் திறந்து, இறைவனை வரவேற்க, அன்னை மரியா உதவுவாராக, என்ற வேண்டுதலுடன், தன் மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.

மேலும், "மகிழ்வு, செபம் மற்றும் நன்றியுணர்வு ஆகியவை, கிறிஸ்து பிறப்பு விழாவை அனுபவிக்க நம்மையே தயாரிக்கும் மூன்று விடயங்கள்" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 16, இஞ்ஞாயிறன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 December 2018, 15:10