தேடுதல்

Vatican News
Stephen Hawking பெற்ற அறிவியல் விருதுகளுள் சில Stephen Hawking பெற்ற அறிவியல் விருதுகளுள் சில  (AFP or licensors)

அமைதியை கட்டியெழுப்ப உதவ வேண்டிய அறிவியல்

மக்கள் முன்னேற்றத்திற்கு தீர்வுகளை வழங்கவேண்டிய கடமை, அறிவியல் உலகிற்கு உள்ளது. ஏனெனில், அறிவியல் காட்டும் முன்னேற்றம், அமைதிக்கு அவசியம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு உதவும் தீர்வுகளை வழங்க, அறிவியல் உலகம் முன்வர வேண்டும் என, தன் டுவிட்டர் செய்தி வழியே, இச்சனிக்கிழமையன்று, அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'மக்களின் நீடித்த, மற்றும், ஒன்றிணைந்த முன்னேற்றத்திற்கான தீர்வுகளை வழங்கும் தலைமைத்துவத்தை உருவாக்க, இன்றைய அறிவியல் சமூகம் அழைப்புப் பெற்றுள்ளது. ஏனெனில், இது, அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு இன்றியமையாதது' என உலக அறிவியல் நாளையொட்டி திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தி உரைக்கிறது.

ஒவ்வோர் ஆண்டும், நவம்பர் 10ம் தேதி சிறப்பிக்கப்படும் உலக அறிவியல் நாள், இவ்வாண்டு, மனித உரிமைகள் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதன் 70ம் ஆண்டையொட்டி, 'அறிவியல், ஒரு மனித உரிமை' என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது.

'அமைதிக்கும் வளர்ச்சிக்குமுரிய உலக அறிவியல் நாள்' என்ற இந்த நாள், சமூகத்தில் அறிவியலின் முக்கியத்துவத்தையும், அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைவருக்கும் பயன்படும் வகையில் பகிரப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி நிற்கிறது.

10 November 2018, 16:54