தேடுதல்

Vatican News
மீன்பிடித்தொழிலாளர்கள் மீன்பிடித்தொழிலாளர்கள் 

நவம்பர் 21ன் கருத்துக்களையொட்டி டுவிட்டர் செய்திகள்

"இன்று உலக மீன்பிடித்தொழில் நாள் என்பதால், கடலைச் சார்ந்து வாழும் அனைவருக்காகவும் செபிப்போம்." - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனித கன்னி மரியா காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட திருநாள், நவம்பர் 21, இப்புதனன்று, கொண்டாடப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மரியாவின் அர்ப்பணத்தை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"அரச மரியாதையுடன் விண்ணகத்திக்கு அழைத்துச் செல்லும் சாலையான பணியின் வழியில், இயேசுவை மகிழ்வுடன் பின்பற்ற, கன்னி மரியா நமக்கு உதவி செய்வாராக" என்ற சொற்களுடன், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி வெளியானது.

மேலும், ஒவ்வோர் ஆண்டும், நவம்பர் 21ம் தேதி சிறப்பிக்கப்படும் உலக மீன்பிடித்தொழில் நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு சிறப்பு டுவிட்டர் செய்தியை, இப்புதனன்று வெளியிட்டார்.

"இன்று உலக மீன்பிடித்தொழில் நாள் என்பதால், கடலைச் சார்ந்து வாழும் அனைவருக்காகவும் செபிப்போம். மீன்பிடித்தொழிலில், கட்டாயத் தொழில் சுமை, மற்றும், மனித வர்த்தகம் ஆகியவை இடம்பெறாமல் இருக்க உலகளாவிய முயற்சிகள் தேவை என்பதையும் பரிந்துரைப்போம்" என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

21 November 2018, 15:16