தேடுதல்

Vatican News
15வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஆரம்பத் திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஆரம்பத் திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

"ஒருவருக்கொருவர் செவிமடுக்கும் வரத்தை வேண்டுவோம்"

"இறைவன் தன் திருஅவையிடம் என்ன கேட்கிறார் என்பதைத் தெளிந்து தெரிவு செய்ய, நாம் ஒருவருக்கொருவர் செவிமடுக்கும் வரத்தை வேண்டுவோம்" என்ற வேண்டுதல் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 3, இப்புதனன்று, வத்திக்கானில் ஆரம்பமான 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தி, ஒரு விண்ணப்ப வடிவில் அமைந்திருந்தது.

"இறைவன் தன் திருஅவையிடம் என்ன கேட்கிறார் என்பதைத் தெளிந்து தெரிவு செய்ய, நாம் ஒருவருக்கொருவர் செவிமடுக்கும் வரத்தை வேண்டுவோம்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

அக்டோபர் 14, ஞாயிறன்று, அருளாளர்களான ஏழு பேருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் திருவழிபாடும், திருப்பலியும் வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் காலை 10.15 மணிக்கு ஆரம்பமாகும் என்று திருப்பீட வழிபாட்டுத் துறையின் தலைவர், அருள்பணி குயிதோ மரினி அவர்கள் அறிவித்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நடைபெறும் கூட்டுத் திருப்பலியில், அருளாளர்களான திருத்தந்தை 6ம் பவுல், பேராயர் ஆஸ்கர் ரோமேரோ உட்பட எழுவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும்.

மறைமாவட்ட அருள்பணியாளர்களான பிரான்செஸ்கோ ஸ்பிநெல்லி, மற்றும், வின்சென்சோ ரொமானோ, அருள்சகோதரிகளான மரிய கத்தரீனா கஸ்பார், மற்றும், இயேசுவின் புனித தெரேசாவின் நசாரியா இஞ்ஞாசியா, இத்தாலிய நாட்டைச் சேர்ந்த இளம் பொதுநிலையினர் நுன்சியோ சுல்ப்ரீசியோ ஆகிய ஐந்து அருளாளர்களும் அக்டோபர் 14ம் தேதி புனிதர்களாக உயர்த்தப்படுகின்றனர்.

03 October 2018, 15:39