தேடுதல்

புனித மோனிக்காவின் கல்லறையில் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் புனித மோனிக்காவின் கல்லறையில் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

குழந்தைகளுக்காக தாய் செபிக்கும் கடமை

புனித மோனிக்காவைப்போல் ஒவ்வொரு தாயும் தன் குழந்தைகளுக்காக இடைவிடாது செபிக்க வேண்டும் என விண்ணப்பிக்கிறார் திருத்தந்தை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

அன்னையர்கள் அனைவரும் புனித மோனிக்காவைப்போல் தங்கள் குழந்தைகளுக்காகத் தொடர்ந்து செபிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 27 இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட புனித மோனிக்கா திருநாளையொட்டி திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், 'அன்பு அன்னையரே, மனந்தளராமல் புனித மோனிக்காவைப்போல் உறுதியுடன் இருங்கள். உங்கள் குழந்தைகளுக்காக இடைவிடாமல் செபியுங்கள்', என்ற சொற்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணங்களுக்குப் பின்னர் உரோம் நகரின் புனித மேரி மேஜர் திருத்தலத்திற்குச் சென்று அன்னைமரிக்கு நன்றி கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று காலையிலும் அங்கு சென்று அயர்லாந்து திருத்தூதுப் பயணத்திற்காக நன்றி கூறி செபித்தபின், வத்திக்கான் திரும்பும் வழியில், உரோம் நகரின் காம்போ மார்சியோவில் உள்ள புனித அகுஸ்தின் கோவிலுக்குச் சென்று புனித மோனிக்காவின் கல்லறையைத் தரிசித்தார்.

ஆகஸ்ட் 27 இத்திங்களன்று, புனித மோனிக்காவின் திருவிழா சிறப்பிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 August 2018, 16:25