தேடுதல்

இரக்கம் என்பது இறைவனின் பெயர் இரக்கம் என்பது இறைவனின் பெயர்  (©Pixel-Shot - stock.adobe.com)

தடம் தந்த தகைமை - இரக்கமுடையோர் இரக்கம் பெறுவர்

உலகை இரக்கக் கண்களால் பார்க்கப் பழகுவோம். அது இறைஇரக்கத்தை நமக்குப் பெற்றுத் தரும். இறக்கும்வரை இரக்கமே நம் இணைபிரியாத் துணையாகட்டும்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர் என்றார் இயேசு.

'கண்ணுக்குக் கண்”, 'பல்லுக்குப் பல்” (விப 21:24) என்ற சட்ட நெறியில் வாழ்ந்து கொண்டிருந்த சமூகத்தில் “இரக்கம்” என்ற சொல் எதிர்ப்புக்குரியதாகத்தான் பார்க்கப்பட்டிருக்கும். 'கெசத்” எனும் எபிரேயச் சொல் இறைவனின் இரக்கத்தைச் சுட்டுகிறது. அச்சொல்லைக் கற்ற இயேசுவின் காலத்தவர்ää “இரங்குதல் இறைவனின் வேலை; சட்டப்படி ஒழுகுதல் மனிதரின் வேலை” எனக் கணித்துக் கொண்டனர். இரக்கமே

இந்த உலகை இயக்குகின்றது என்ற உண்மையை இரக்க இதயத்தவராம் இயேசுவால்தான் புரிய முடிந்தது.

நாய்க்குட்டிகள் விற்பனை செய்யும் கடையில் நுழைந்த ஜானி ஒவ்வொன்றின் விலையும் 10,000, 5,000, 2,000, 1,000 எனத் தொங்கவிடப் பட்டிருந்ததைக் கண்டான். ஓரமாக ஒதுக்கிப் போடப்பட்டிருந்த ஒரு குட்டி நாயைத் தூக்கி 'இதன் விலை?” எனக் கேட்க, 'அது ஊனமானது; 100 ரூபாய்தான்” என்றார் கடைக்காரர். 'இதுவே போதும்” என்ற ஜானியிடம்,

'ஏன்” எனக் கேட்க, தன் கால்சட்டையைத் தூக்கி 'நானும் அதுபோலத்தான்” என்றான் ஜானி.

உலகை இரக்கக் கண்களால் பார்க்கப் பழகுவோம். அது இறைஇரக்கத்தை நமக்குப் பெற்றுத் தரும். இறுக்கம் வேண்டாம்; இரக்கம் போதும். இறக்கும்வரை இரக்கமே நம் இணைபிரியாத் துணையாகட்டும்.

இறைவா! இரக்கம் எனும் வற்றா நதியில் இறக்கும்வரை பயணிக்க நீரே படகாகும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 May 2024, 15:25