தேடுதல்

2024.04.26 Ufficiale 2024.04.26 Ufficiale 

தடம் தந்த தகைமை – நிறைவேறிய ஆண்டவரின் வாக்கு

மக்கள் நகர்வாயிலில் அவனை மிதித்துப் போடவே, அவன் இறந்து போனான். இவ்வாறு, கடவுளின் அடியவரான எலிசா தன்னிடம் வந்த அரசனுக்கு அறிவித்தபடியே நடந்தது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

இஸ்ரயேல் அரசன் தனக்குப் பக்க பலமாயிருந்த அதிகாரியிடம், நகர்வாயிலின் காவல் பொறுப்பை ஒப்படைத்திருந்தான். மக்கள் நகர்வாயிலில் அவனை மிதித்துப் போடவே, அவன் இறந்து போனான். இவ்வாறு, கடவுளின் அடியவரான எலிசா தன்னிடம் வந்த அரசனுக்கு அறிவித்தபடியே நடந்தது. இங்ஙனம், “நாளை இந்நேரம் சமாரிய நகர வாயிலில் இரண்டு மரக்கால் வாற்கோதுமை, ஒரு வெள்ளிக் காசுக்கும், ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு வெள்ளிக் காசுக்கும் விற்கப்படும்” என்று கடவுளின் அடியவர் அரசனிடம் கூறியிருந்த வாக்கு நிறைவேறியது.

ஏனெனில், அந்த அதிகாரி கடவுளின் அடியவரை நோக்கி, “இதோ பாரும்! ஆண்டவர் வானின் கதவுகளைத் திறந்துவிட்டாலும் இத்தகைய காரியம் நடக்குமா?” என்று கேட்டிருந்தான். அதற்கு அவர், “இதை நீ உன் கண்களால் காண்பாய். ஆனால், அதில் எதையும் நீ உண்ணமாட்டாய்” என்று கூறியிருந்தார். அவ்வாறே, அவனுக்கு நேரிட்டது. மக்கள் அவனை நகர வாயிலில் மிதித்துப்போட அவனும் இறந்து போனான்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 May 2024, 17:40