தேடுதல்

சிலுவை அடியில் மரியா சிலுவை அடியில் மரியா 

நேர்காணல் – சிலுவை அடியில் மரியாக்களின் குழு

கிறிஸ்தவத்தின் ஆரம்பத்திலும் அதன் வளர்ச்சியிலும் பெண்களின் பங்கு எண்ணற்றது. சிலுவை அடியில் நின்ற அன்னை மரியாவிடம் உலகம் முழுவதையும் அதிலுள்ள மக்கள் அனைவரையும் அர்ப்பணித்து தன் வாழ்வை நிறைவு செய்தார் இயேசு.
சிலுவை அடியில் மரியாக்களின் குழு - அருள்முனைவர் டென்னிஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

தன்னைச் சார்ந்தவர்களைக் கைவிடாத மனமும், தன்னைச் சாராதவர்களை அன்பு செய்து உதவிடும் குணமும் படைத்த ஒவ்வொரு பெண்களும் நாட்டின் வரம். பெண்கள் சாதிக்காத துறைகள் இல்லை, பெண்களின் பங்களிப்பு இல்லாத நாடுகள் முன்னேற்றம் கண்டதும் இல்லை. அறிவில் சிறந்தவர்கள், மனதளவில் வலிமையானவர்கள். ஆளுமையில் திறமையானவர்கள் என பெண்கள் குறித்துப் பலவற்றை சொல்லிக் கொண்டே போகலாம். வரலாற்றிலும் பெண்களின் பங்கு அளப்பரியது. கிறிஸ்தவத்தின் ஆரம்பத்திலும் அதன் வளர்ச்சியிலும் பெண்களின் பங்கு எண்ணற்றது. சிலுவை அடியில் உலகம் முழுவதையும் அன்னை மரியாவிடம் அர்ப்பணித்து தன் வாழ்வை நிறைவு செய்தார் இயேசு. அங்குத் தொடங்கியது பெண்கள் ஆற்றிய நற்செய்திப்பணி. தவக்காலத்தின் ஐந்தாம் வாரத்தில் இருக்கக்கூடிய நாம் இயேசுவின் சிலுவை அடியில் இருந்த பெண்கள் பற்றியக் கருத்துக்களை இன்றைய நேர்காணலில் நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்முனைவர் டென்னிஸ் குழந்தைசாமி. 

மரியின் ஊழியர் சபை அருள்தந்தையான டென்னிஸ் குழந்தை சாமி அவர்கள், திருநெல்வேலிக்கு அருகில் உள்ள வீரவநல்லூரில் பிறந்தவர். தற்போது, உரோமையில் உள்ள,  Angelicum,  Urbanyana  பல்கலைக்கழகங்களில் மரியியல் பேராசிரியராகவும்,  ரோமில் உள்ள மரியானோ பல்கலைக்கழகத்தின் முதல்வராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். ஆயர் மாமன்றத்திற்கான தயாரிப்புக் குழுவின் உறுப்பினர், வத்திக்கானின் பன்னாட்டு மரியியல் நிறுவனத்தின் ஆலோசகர்  என பல சிறப்புமிக்க பணிகளை திறம்பட செய்து கொண்டிருப்பவர் அருள்தந்தை டென்னிஸ் குழந்தைசாமி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 March 2024, 08:17