தேடுதல்

மக்களுக்கு உணவளித்த எலிசா மக்களுக்கு உணவளித்த எலிசா 

தடம் தந்த தகைமை – மக்களுக்கு வயிறார உணவளித்த எலிசா

மக்கள் அனைவரும் வயிறார உண்டனர். ஆண்டவரது வாக்கின்படி அனைவரும் உண்டது போக மீதியும் இருந்தது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப் பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரான எலிசா இறைவாக்கினரிடம் கொண்டு வந்தார். எலிசா, அவற்றை “மக்களுக்கு உண்ணக் கொடு” என்று அவரிடம் கூறினார். அவருடைய பணியாளன், “இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?” என்றான். அவரோ, “இவற்றை இம்மக்களுக்கு உண்ணக் கொடு. ஏனெனில் ‘உண்ட பின்னும் மீதி இருக்கும்’ என்று ஆண்டவர் கூறுகிறார்” என்றார். அவ்வாறே, அவன் புது தானியத்தில் செய்யப்பட்ட அந்த இருபது வாற்கோதுமை அப்பங்களையும், முற்றிய தானியக் கதிர்களையும் மக்களுக்குப் பரிமாறினான். அவர்களும் வயிறார உண்டனர். ஆண்டவரது வாக்கின்படி அனைவரும் உண்டது போக மீதியும் இருந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 March 2024, 15:09