தேடுதல்

ஐரோப்பிய ஒன்றிய ஆயர்பேரவையின் (COMECE) பொதுச் செயலாளர் அருள்பணி Manuel Barrios Prieto ஐரோப்பிய ஒன்றிய ஆயர்பேரவையின் (COMECE) பொதுச் செயலாளர் அருள்பணி Manuel Barrios Prieto  

நைஜீரியாவில் துன்புறும் மக்களைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பு

நைஜீரியாவில் உள்ள அனைத்து குடிமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், அதன் சட்டத்திற்கு இணங்க வலுவான நடவடிக்கைகளை எடுக்கவும், தூதரக வழிகளைப் பயன்படுத்தவும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்புவிடுத்துள்ளது ஐரோப்பிய ஒன்றிய ஆயர்பேரவை.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நைஜீரியாவில் உள்ள கிறிஸ்தவ சமூகங்களுக்கு எதிரான குற்றங்கள் அனைத்தும் பொறுப்பற்றவையாக இருப்பதை இனியும் பொறுத்துக்கொள்ளக்கூடாது என்றும், திட்டமிட்ட முறையில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவ சமூகங்கள் மற்றும் அங்கு வாழும் குடிமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு நைஜீரிய அரசாங்கத்திற்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார் அருள்பணி மானுவல் பேரியோஸ் பிரிட்டோ.

அண்மையில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய ஆயர்பேரவையின் கூட்டத்தில் பகிரப்பட்ட கருத்துக்களை எடுத்துரைத்து நைஜீரியாவில் உள்ள கிறிஸ்தவர்களின் பாதுகாப்பு குறித்து இவ்வாறு எடுத்துரைத்துள்ளார் ஐரோப்பிய ஒன்றிய ஆயர்பேரவையின் (COMECE) பொதுச் செயலாளர் அருள்பணி மானுவல் பேரியோஸ் பிரிட்டோ.

மேலும் நைஜீரியாவில் உள்ள அனைத்து குடிமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், அதன் சட்டத்திற்கு இணங்க வலுவான நடவடிக்கைகளை எடுக்கவும், தூதரக வழிகளைப் பயன்படுத்தவும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்புவிடுத்துள்ளது ஐரோப்பிய ஒன்றிய ஆயர்பேரவை.

நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான அண்மைய தாக்குதல்களைக் கண்டித்து, பிப்ரவரி 8, வியாழன் அன்று நிறைவேற்றப்பட்ட ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றிய ஆயர்பேரவை வரவேற்கிறது என்றும், தீர்மானம் மோதலின் மத பரிமாணத்தை குறைத்து மதிப்பிடுகிறது என்றும் வலியுறுத்தியுள்ளது ஐரோப்பிய ஒன்றிய ஆயர் பேரவை அறிக்கை.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயுதமேந்தியவர்களால் தொடர்ந்து ஏற்படும் அழிவை, கால்நடை வளர்ப்பவர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான மோதலாக இனி கருத முடியாது என்றும், அத்தகையோர்களின் நடவடிக்கைகள் பயங்கரவாதச் செயல்களாகக் கருதப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது ஆயர்பேரவை அறிக்கை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 February 2024, 14:15