தேடுதல்

கோவிலில் வியாபாரிகளை விரட்டிய இயேசு கோவிலில் வியாபாரிகளை விரட்டிய இயேசு 

தடம் தந்த தகைமை – இறைவனின் இல்லம் சந்தைக்கூடமல்ல

மனிதர் நிறைவு காண வேண்டிய எருசலேம் ஆலயம் அருளுக்காக அன்றி பொருளுக்காகச் செயல்பட்டது. பணமும் பதவியுமே அங்கு ஆதிக்கம் செலுத்தலாயின.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

எருசலேம் ஆலயம் எழில் மயமானது. அதனைப் பார்த்து இரசிக்கப் பல நாட்கள் வேண்டும். அது எவ்வளவுக்கு எழிலூட்டப்பட்டிருந்ததோ அவ்வளவுக்கு எரிச்சலூட்டும் செயல்பாடுகளும் அங்கே நிகழ்ந்தேறின. உண்மையான எழில் என்பது ஆபத்திலும், தேவையிலும், அடிமட்டத்திலும் வீழ்ந்து அழுவோரின் விழிநீர் துடைத்துத் தூக்கி நிறுத்துவதே. ஆனால் எருசலேம் ஆலய நடைமுறைகள் யாவும் ஏழையரை நசுக்கின, பெண்களை ஒதுக்கின, மாற்றுத்திறனாளரை மனம் நோகச் செய்தன, பிற இனத்தார் எனச் சொல்லிப் பாகம் பிரித்தன. அதிகாரமும், ஆதிக்கமும், சடங்குகளும் வியாபாரமுமே அங்கே வியாபித்திருந்தன. ஆலயம் அருள் சுரக்குமிடம். மக்களை ஒருங்கிணைக்குமிடம்.

இறைஅன்பைச் சுவைக்குமிடம். மன நிறைவைப் பெறுமிடம். அந்த ஆலயம் அதிகாரம் கொண்ட சதிகாரர் கைகளில் அகப்பட்டால் அருள் இருளாகும். மனிதர் நிறைவு காண வேண்டிய எருசலேம் ஆலயம் அருளுக்காக அன்றி பொருளுக்காகச் செயல்பட்டது. பணமும் பதவியுமே அங்கு ஆதிக்கம் செலுத்தலாயின. பல்வேறுவித வரிகளாலும் காணிக்கைகளாலும் வறியவர் உறிஞ்சப்பட்டனர். அது இயேசுவை எகிறச் செய்தது. இயேசுவின் எகிறல் ஆலய அலங்கோலத்திற்காக அல்ல, அங்கு வந்த ஏழையர் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதாலே. நேசமும் நேயமும் சந்திக்குமிடமே ஆலயம்.

இறைவா! உலகே ஆலயம்; உலகில் நீர் படைத்த ஒவ்வோர் உயிரும் ஆலயம். அதனில் நுழைந்து வழிபட வழிகாட்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 February 2024, 14:26