தேடுதல்

கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ   (ANSA)

அனைத்துலக அமைதிக்காக இராக்கில் மூன்று நாள் உண்ணா நோன்பு!

ஜனவரி 22-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதிவரை இராக்கில் நடைபெறும் இந்த உண்ணா நோன்பை பெரும்பாலான சிரியா கிறிஸ்தவர்கள் கடைப்பிடிருக்கிறார்கள்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஈராக், புனித பூமி, உக்ரைன் மற்றும் அனைத்துலகின் அமைதிக்காக மூன்று நாள் உண்ணா நோன்பில் தனது நாட்டு கிறிஸ்தவர்களை அந்நாட்டின் கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள் வழிநடத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகத் தலைவர்கள் போரை விடுத்து அமைதியைத் தேடவும், மனிதகுலத்தின் நன்மைக்காக நல்லிணக்கம், உடன்பிறந்த உறவு, அன்பு மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றில் பலனளிக்கும் முன்னேற்றத்தை அடையவும், இறைவன் அவர்களுக்கு உதவுமாறு எல்லாம் வல்ல இறைவனிடம் உருக்கமாக இறைவேண்டல் செய்யுங்கள் என்று தனது விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் கர்தினால் சாக்கோ.

ஜனவரி 22-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதிவரை நடைபெறும் இந்த உண்ணா நோன்பை பெரும்பாலான சிரியா கிறிஸ்தவர்கள் கடைப்பிடிருக்கிறார்கள் என்று அச்செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறைவாக்கினர் யோனா, திமிங்கலத்தின் வயிற்றில் மூன்று நாள்கள் இருந்ததை  நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நினிவே நோன்பு நடத்தப்படுகிறது. நினிவே நகரத்தில் வசிப்பவர்கள் யோனாவின் மனந்திரும்புதலுக்கான அழைப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, அவர்கள் மேற்கொண்ட உண்ணா நோன்பை நினைவுபடுத்துவதாகவும் இது அமைந்துள்ளது.

பல சிரிய கிறிஸ்தவர்கள் இந்த  மூன்று நாட்களிலும் நள்ளிரவு முதல் நண்பகல் வரை அனைத்து உணவு மற்றும் பானங்களைத் தவிர்க்கின்றனர். மற்றவர்கள் இறைச்சி அல்லது இறைச்சி சம்மந்தமான பொருட்களை முழு காலத்திற்கும் தவிர்க்கின்றனர் அல்லது சாப்பிடுவதே கிடையாது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 January 2024, 15:18