தேடுதல்

இந்தியக் குழந்தைகள் இந்தியக் குழந்தைகள்   (For exclusive buying details contact nikhilgangavane@gmail.com)

மற்றோர் அரசு சாரா கிறிஸ்தவ நிறுவனத்திற்கு இந்திய அரசு தடை !

World Vision இந்தியா கருத்துப்படி, 22 மாநிலங்களில் ஏறத்தாழ 3,000,000 குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் அதன் மனிதாபிமான சேவைகளால் பயனடைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நாட்டின் மிகப்பெரிய கிறிஸ்தவ தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் ஒன்றான World Vision India, வெளிநாடுகளிலிருந்து நிதிபெறுவதை இந்திய அரசு தடை செய்துள்ளதாக யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு நிதியைப் பெற்று உதவுகிறோம் என்பதற்காகவே, ஒன்றிய அரசு உண்மையில் எங்கள் பதிவை இரத்து செய்துள்ளது" என்றும், இந்தத் தடையானது நாட்டில் உள்ள இந்நிறுவனங்களின் திட்டங்களை மோசமாக பாதிக்காது, காரணம் அவை "நாட்டிற்குள் இருந்து உருவாக்கப்படும் நிதியால் ஆதரிக்கப்படுகின்றன என்றும், இதுகுறித்து கருத்துத் தெரிவித்த கிறிஸ்தவ அரசு சாரா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என்றும் அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அதேவேளையில், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் (FCRA) பதிவை இரத்து செய்வதற்கான ஒன்றிய அரசின் முடிவு, நாட்டில் World Vision இந்தியாவின் பணியை முடக்கும் என்றும், ஏனென்றால் அதன் நாடு தழுவிய செயல்பாடுகளின் செலவை ஈடுசெய்ய உள்நாட்டு நிதி போதுமானதாக இல்லை என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன என்றும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

World Vision இந்தியா கருத்துப்படி, 22 மாநிலங்களில் ஏறத்தாழ 3,000,000 குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் அதன் மனிதாபிமானப் பணிகளால் பயனடைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

World Vision இந்தியாவின் பதிவு நவம்பர் 2022-ஆம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்டது, அதன் FCRA உரிமத்தைப் புதுப்பிப்பதற்கு விண்ணப்பித்த ஒரு ஆண்டு கழித்து. அரசு பதிவை 180 நாட்களுக்கு நிறுத்தி வைத்தது. இடைநீக்கம் மே 2023 இல் நீட்டிக்கப்பட்டது. 2014-இல் இந்து ஆதரவு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, 16,000-க்கும் மேற்பட்ட அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் FCRA உரிமங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஜனவரி, 2022-ஆம் ஆண்டின் நிலவரப்படி, நாட்டில் 16,989 FCRA- பதிவு செய்யப்பட்ட அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 January 2024, 16:07